அமெரிக்கா இவ்ளோ மோசமான நாடாகிவிட்டதா!?

திரும்பி வந்து பார்த்தபோது, எனது கார் மிகவும் மோசமான நிலையில் உடைக்கப்பட்டு, அதில் இருந்த என் உடைமைகள் திருடு போயிருந்தன

கடந்த ஏப்ரல் மாதம் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், இசைக்கச்சேரிக்காக அமெரிக்கா சென்றிருந்த போது, அங்கு அவரது பொருட்டுகள் திருடப்பட்டுவிட்டன. அவரது பாஸ்போர்ட், ஐபாட், பாடல் ஸ்க்ரிப்ட்கள், கிரெடிட் கார்டுகள் மற்றும் பணம் ஆகியவை திருடு போயிருந்தன. பின்னர் ஒருவழியாக இந்திய தூதரகம் மூலம் அவருக்கு டூப்ளிகேட் பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. 24 மணி நேரத்திற்குள்.

இந்நிலையில், பிரபல பின்னணி பாடகி சின்மயி, தனது உடைமைகள் அமெரிக்காவில் திருடுபோயுள்ளதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர், “அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோ நகருக்கு ஒரு இசைப் பயணத்துக்காக சென்றிருந்தேன். அப்பொழுது அங்கிருந்த கார் பார்க்கில், காரை பார்க்கிங் செய்துவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது, எனது கார் மிகவும் மோசமான நிலையில் உடைக்கப்பட்டு, அதில் இருந்த என் உடைமைகள் திருடு போயிருந்தன” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,”ஐந்து நிமிடம் கழிந்தே என்ன நடந்தது என்பதை யூகிக்க முடிந்தது. சான்பிரான்சிஸ்கோ நகரில் திருடுப் போவது என்பது பொதுவான ஒன்று என போலீசார் கூறினர். திருட்டு சம்பவம் நடைபெற்றபோது, பக்கத்தில் இருந்த ஒரு நபர் திருடனை துரத்தியதால், இது தொடர்பாக அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close