/tamil-ie/media/media_files/uploads/2018/01/krish-sangeetha.jpg)
பின்னணிப் பாடகரும், நடிகை சங்கீதாவின் கணவருமான க்ரிஷ், இசையமைப்பாளராக அறிமுகமாக இருக்கிறார்.
கமல்ஹாசன் நடித்த ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் இடம்பெற்ற ‘மஞ்சள் வெயில் மாலையிலே’ பாடலை ஹரிஹரனுடன் இணைந்து பாடியவர் க்ரிஷ். அதன்பிறகு ஹாரிஸ் ஜெயராஜின் இசையமைப்பில் பல பாடல்களைப் பாடிய க்ரிஷ், யுவன் சங்கர் ராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், ஸ்ரீகாந்த் தேவா, ஜோஷ்வா ஸ்ரீதர், டி.இமான், விஜய் ஆண்டனி, கார்த்திக் ராஜா, தமன், சுந்தர்.சி பாபு உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ளார்.
பாடுவது மட்டுமின்றி, நடிப்பதிலும் க்ரிஷுக்கு அதிக ஆர்வம். ‘சிங்கம் 3’ உள்பட சில படங்களில் நடித்துள்ளார். க்ரிஷுக்கும், நடிகை சங்கீதாவுக்கும் 2009ஆம் ஆண்டு திருமணம் ஆனது. திருச்சியை சொந்த ஊராகக் கொண்ட க்ரிஷின் இயற்பெயர், விஜய் பாலகிருஷ்ணன்.
பின்னணிப் பாடகராக, நடிகராக இருந்த க்ரிஷ், இந்த வருடம் இசையமைப்பாளராக அவதாரம் எடுக்கிறார். இந்தத் தகவலை அவரே ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ஆனால், என்னென்ன படங்களுக்கு இசையமைக்கப் போகிறார் என்ற விவரத்தை அவர் அறிவிக்கவில்லை.
Actor Turned Singer, Then Singer Turned Actor, Now Actor turning Music Director. Will be composing for couple of movies this year.. Will update soon on the Projects.. Will do my best to give u all some good music... Need all ur love, blessings, Prayers and support????????
— Krish (@krishoffl) 25 January 2018
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.