Advertisment

நியூ லுக்... கியூட் ஸ்மைல்... சம்யுக்தா ஸ்டைலிஷ் போட்டோஸ் வைரல்

ஸ்ரீதிவ்யா என்ற குறும்பத்தில் நடித்துள்ள சம்யுக்தா தற்போது விஜய் டிவியின் சிற்பிக்குள் முத்து தொடரில் நடித்து வருகிறார்.

author-image
WebDesk
New Update
Samyuktha

Samyuktha

திருமணமாகி ஒரு மாதத்தில் தனது கணவரை பிரிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை சம்யுக்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment
publive-image

சிற்பிக்குள் முத்து சீரியல் மூலம் பிரபலமான நடிகை சம்யுக்தா தமிழில் வெப் தொடர்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தார்.

publive-image

டியூப்லைட் என்ற யூடியூப் சேனலில் நிறைமாத நிலவே என்ற தொடரின் மூலம் அறிமுகமான இவர் இந்த தொடரின் மூலம் நல்ல வரவேற்பை பெற்ற இவர், அடுத்து 2021-ம் ஆண்டு விஜய் டிவியின் பாவம் கணேசன் தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.

publive-image

தொடர்ந்து ஸ்ரீதிவ்யா என்ற குறும்பத்தில் நடித்துள்ள சம்யுக்தா தற்போது விஜய் டிவியின் சிற்பிக்குள் முத்து தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

publive-image

இந்த தொடரில் நடித்தபோது தன்னுடன் இணைந்து நடித்த விஷ்ணுகாந்தை காதலித்து கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்துகொண்ட சம்யுக்தா ஒரே மாதத்தில் அவரை விட்டு பிரிந்தார்.

publive-image

இந்த விவகாரம் கடந்த சில மாதங்களாக இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் விஷ்ணுகாந்த் – சம்யுக்தா இருவரும் மாறி மாறி குறை கூறிக்கொண்டே இருக்கின்றனர்.

publive-image

சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் சம்யுக்தா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாவது வழக்கம்.

publive-image

அந்த வகையில் தற்போது சம்யுக்தா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வரவேற்பை பெற்று வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Serial Actress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment