scorecardresearch

சிவாங்கி-க்கு இவ்ளோ ரசிகர்களா? ஸ்தம்பித்த குமுளி நெடுஞ்சாலை

சூப்பர் சிங்கர் மற்றும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஷிவாங்கி தேனி மாவட்டம், கம்பத்தில் ஒரு நகைக்கடை திறப்புவிழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, ஏராளமான ரசிகர்கள் குவிந்ததால், குமுளி நெடுஞ்சாலை ஸ்தம்பித்தது.

சிவாங்கி-க்கு இவ்ளோ ரசிகர்களா? ஸ்தம்பித்த குமுளி நெடுஞ்சாலை

சூப்பர் சிங்கர் மற்றும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஷிவாங்கி தேனி மாவட்டம், கம்பத்தில் ஒரு நகைக்கடை திறப்புவிழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, ஏராளமான ரசிகர்கள் குவிந்ததால், குமுளி நெடுஞ்சாலை ஸ்தம்பித்தது.

சூப்பர் சிங்கர் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற சிவாங்கி தனது மெல்லிசை குரலால் ஏராளமான ரசிகர்களின் மனதி இடம்பிடித்தார். அதே நிகழ்ச்சியில், அவருடைய நகைச்சுவையான இயல்பின் மூலம், நகைச்சுவை பெர்ஃபார்மராக மிளிர்ந்தார். இதனால், சூப்பர் நிகழ்ச்சியில் பிரபலமானவர்களின் பட்டியலில் சிவாங்கியும் இடம்பிடித்தார்.

இதையடுத்து, விஜய் டிவியில், சிவாங்கிக்கு ஒரு மிகப் பெரிய வாசல் திறக்கப்பட்டது. அதுதான் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாகப் பங்கேற்றார். சமையல் மற்றும் நகைச்சுவை மிக்க நிகழ்ச்சியான குக்கு வித் கோமாளியில் சிவாங்கிக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவானது.

ஏற்கெனவே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரலமாகி இருந்த சிவாங்கி, குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார். இதையடுத்து, சிவாங்கிக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து சினிமாவிலும் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில்தான், தேனி மாவட்டம், கம்பத்தில் ஒரு நகைக்கடை திறப்பு விழா நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக சென்ற சிவாங்கியைக் காண ஏராளமான ரசிகர்கள் குவிந்ததால் குமுளி நெடுஞ்சாலை போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்துப் போயுள்ளது. இவ்வளவு பெரிய கூட்டத்தைப் பார்த்தவர்கள் சிவாங்கிக்கு இவ்வளவு ரசிகர்களா என்று வியந்துபோயிருக்கிறார்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Sivaangi visits kambam fans crowd assembled kumuli highways traffic jam

Best of Express