Advertisment

சிவகார்த்திகேயன் - சமந்தா படத்தின் டைட்டில் என்ன தெரியுமா?

தென்காசி பகுதிகளில் நடைபெற்று வரும் இந்தப் படத்தின் ஷூட்டிங், பாதியைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. ஆனால், இன்னும் படத்துக்குப் பெயர் வைக்கவில்லை.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
sivakarthikeyan first look

சிவகார்த்திகேயன் - சமந்தா நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு என்ன என்பது தெரியவந்துள்ளது.

Advertisment

சிவகார்த்திகேயன் நடிப்பில், மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வேலைக்காரன்’. நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், மலையாள முன்னணி நடிகர்களுள் ஒருவரான ஃபஹத் ஃபாசில் வில்லனாக நடிக்கிறார். அத்துடன், பிரகாஷ் ராஜ், ரோகிணி, சினேகா, ரோபோ சங்கர், சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி எனப் பலரும் நடித்துள்ளனர்.

24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில். ஆர்.டி.ராஜா இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல்கள், சூப்பர் ஹிட்டாகியுள்ளனர். இந்தப் படம், வருகிற 22ஆம் தேதி உலகம் முழுக்க ரிலீஸாகிறது. படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள், ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர்.

‘வேலைக்காரன்’ படத்தைத் தொடர்ந்து, பொன்ராம் இயக்கத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ மற்றும் ‘ரஜினி முருகன்’ படங்களைத் தொடர்ந்து இருவரும் மூன்றாவதாக இணைந்துள்ள படம் இது. சமந்தா ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தில், காமெடியனாக சூரி நடிக்கிறார். டி.இமான் இசையமைக்கும் இந்தப் படத்தையும், ஆர்.டி.ராஜாவின் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

தென்காசி பகுதிகளில் நடைபெற்று வரும் இந்தப் படத்தின் ஷூட்டிங், பாதியைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. ஆனால், இன்னும் படத்துக்குப் பெயர் வைக்கவில்லை. ஷூட்டிங் ஸ்பாட்டில் பேசிக் கொண்டபடி, படத்துக்கு ‘சீம(மை) ராஜா’ என்று பெயர் வைக்கலாம் என முடிவு செய்துள்ளார்களாம். ஆனால், இந்தத் தலைப்புதான் என்பதை இன்னும் உறுதி செய்யவில்லை என்கிறார்கள்.

Tamil Cinema Ponram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment