சிவகார்த்திகேயன்.... அசாத்திய வளர்ச்சியை தன் தோளில் சுமந்து கொண்டிருக்கும் போராளி. அந்த வளர்ச்சியின் மிதப்பை தன் தலையில் சுமக்காததால் இன்றும் மிளிர்கிறார் SK அண்ணா-வாக.
/tamil-ie/media/media_files/uploads/2020/02/a1396-162x300.jpg)
இந்தியளவில், தொலைக்காட்சியில் இருந்து வந்து திரையுலகில் சாதித்தவர்களை வரிசைப்படுத்தினால் அதில் டாப் 5 இடங்களில் சிவகார்த்திகேயனுக்கும் நிச்சயம் இடமுண்டு. ஷாருக் கான், அஜித், யஷ் என்று ஒவ்வொரு மொழியிலும் சின்னத்திரையில் இருந்து பெரியதிரையில் கர்ஜித்தவ்ர்களில் இவரின் சப்தமும் பெரிது.
சிவகார்த்திகேயனின் மிக முக்கிய கேரக்டர் என்று நாம் பார்ப்பது, கூடவே இருந்த ஆத்மாக்களுக்கு உதவுவது!. சினிமா ஆதிக்கத்திற்கு முன்பு தான் வாய்ப்புகளுக்காக போராடிய காலங்களில், தன் பசி பகிர்ந்த, தன் அழுகை பகிர்ந்த, தன் மகிழ்ச்சி பகிர்ந்த, தன் ஏக்கம் பகிர்ந்த, தன் விரக்தி பகிர்ந்த நண்பர்களுக்கும், அதிலும் தான் நம்புபவர்களுக்கு இன்று ஏணியாக நின்று உச்சி தொட உதவும் அந்த குணம் தான், சிவகார்த்திகேயனின் இன்றைய வளர்ச்சி தாண்டி நாம் கவனிக்க வேண்டிய விஷயமாகும்.
/tamil-ie/media/media_files/uploads/2020/02/a1397-300x174.jpg)
'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தின் அதிரி புதிரி வெற்றி என்பது ரஜினி தவிர்த்து இன்றைய முன்னணி ஹீரோக்களாக வலம் வரும் அஜித், விஜய் படங்களின் வெற்றிக்கு இணையானது என்பதை தமிழகத்தின் எந்த விநியோகஸ்தரும் மறுக்க முடியாது. 'இவனுக்கு என்ன இப்படி கூட்டம் கூடுது' என்று வாய்விட்டே ஆச்சர்யப்பட்டனர்.
வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் ரிசல்ட் தான், 'இவர் அடுத்த முன்னணி நடிகர்' என்ற அழுத்தமான நம்பிக்கையை தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும். தியேட்டர் ஓனர்களுக்கும் கொடுத்தது.
இடையில் சில தோல்விகளுக்கு மத்தியிலும், இன்றும் அந்த நம்பிக்கை தொடர்ந்து கொண்டிருப்பதை நாம் ஆச்சர்யமாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்ற தோற்றத்தில் பல நடிகர்கள் உருவானதை நாம் பார்த்திருக்கிறோம். ரஜினியை போன்ற முக அமைப்பு, ரஜினியை போன்ற ஹேர் ஸ்டைல், ரஜினியை போன்ற மேனரிசம் என்று அவர்கள் ரஜினியாகவே நம் கண்ணுக்கு தெரிந்தார்கள். காணாமல் போனார்கள்.
இன்று, சிவகார்த்திகேயனும், ரஜினியின் வசீகரத்தை கொடுக்கிறார். ரஜினியின் ஸ்டைல் அவரிடம் அதிகமாகவே தென்படுகிறது. ரஜினியின் பிரதிபலிப்பை அவரிடம் காண முடிகிறது. ஆனால், இத்தனை ரஜினி அம்சங்களையும் கொண்ட சிவகார்த்திகேயனாகவே அவர் நம் கண்களுக்கு தெரிந்துவிடுகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2020/02/a1398-300x195.jpg)
இந்த குறுகிய காலத்தில அவர் முன்னணி ஹீரோவாக முன்னேறியதற்கு 'சிவகார்த்திகேயன் கண்களில் ரஜினி' எனும் யாருக்கும் வாய்க்காத ஃபார்முலாவே காரணம். அதேசமயம், அவரது விடா முயற்சி, உழைப்பு, நம்பிக்கை இல்லாமல் இந்த சாதனை சாத்தியமேயில்லை.
இன்றைய தமிழ் சினிமாவில் யங் ஹீரோக்களின் வரிசையில் சிவகார்த்திகேயனுக்கு மட்டும் இருக்கும் தனிச்சிறப்பு ஒன்றை நாம் இங்கு கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
சிவா ஒரு Zero Movies இல்லாத நடிகர் என்பது விநியோகஸ்தர்களுக்கு மட்டும் தெரிந்த சங்கதி.
ஒரு நடிகனின் படம் ரிலீசாகிறது… அந்தப் படம் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. ரசிகர் அல்லாதோருக்கும் பிடிக்கவில்லை. ஆனால், சுத்தமாக அடி வாங்காமல், இன்னும் புரியும் படி சொல்ல வேண்டுமெனில் மரண ஃபிளாப் ஆகாமல் தியேட்டரில் ஓடுகிறது என்றால், அந்த படத்தின் நாயகனே Zero Movies இல்லாத நடிகர் ஆகிறார்.
தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆருக்கு கூட இல்லாத Zero Movies அந்தஸ்து ரஜினிகாந்துக்கு இருந்தது. அவரது ஃபிளாப் படங்கள் கூட, ஒரு கட்டம் வரை ஓடிய பிறகு தான் தியேட்டரில் இருந்து எடுக்கப்படும். A செண்டர், B செண்டர், C செண்டரிலிருந்து Z செண்டர் வரை அனைத்து வகை ரசிகர்களும் தியேட்டரில் வந்து பார்த்த பிறகு தான் படம் தூக்கப்படும்.
/tamil-ie/media/media_files/uploads/2020/02/a1401-300x183.jpg)
இப்போது வரை ரஜினி அதே ஸ்டேஜில் தான் இருக்கிறார் என்பது வேறு விஷயம். இருப்பினும், அவருக்கு பிறகு அந்த இடத்தில் முக்கால்வாசியை நிரப்பிய ஒரே நடிகர் அல்லது ஹீரோ விஜய் மட்டுமே. அவரது சக போட்டியாளரான அஜித் கூட பல Zero Movies கொடுத்திருக்கிறார். ஆனால், அஜித்தை கம்பேர் செய்கையில் விஜய்யின் Zero Movies எண்ணிக்கை மிக மிக குறைவு.
இப்போது விஜய்க்கு பிறகு, அந்த இடத்திற்கு வந்திருப்பவர் சிவ கார்த்திகேயன் மட்டுமே. இந்த கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் சிவாவை தவிர, வேறு எந்த அவரது சம கால நடிகரும் Zero Movies இல்லாத ஹீரோவே கிடையாது.
நினைவில் கொள்ளுங்கள், சிவகார்த்திகேயன் நடித்த சில படங்கள் எதிர்பார்த்த வசூல் பெறவில்லை. சிவாவுக்கு பண நெருக்கடி கூட கொடுத்திருக்கின்றன. ஆனால், எந்தப் படமும் Zero Movies கிடையாது. இது விஜய்யின் ஆரம்ப கால வளர்ச்சியை விட பெரியதாகும். அப்படியெனில், இன்னும் 5 - 7 ஆண்டுகளில் சிவகார்த்திகேயன் மார்க்கெட் எங்கு இருக்கும் இதிலிருந்தே நாம் தெரிந்து கொள்ள முடியும்.
என்றைக்கும் சிவ கார்த்திகேயனின் படங்கள் தோற்றாலும் சிவ கார்த்திகேயன் தோற்பதில்லை!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மிஸ்டர்.ஜென்டில்மேன்