டிசம்பர் 22ஆம் தேதி ‘வேலைக்காரன்’ ரிலீஸாவதை முன்னிட்டு, கேரளாவில் உள்ள தன்னுடைய ரசிகர்களைச் சந்துத்துள்ளார் சிவகார்த்திகேயன்.
சிவகார்த்திகேயன் நடிப்பில், மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வேலைக்காரன்’. நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில் வில்லனாக நடித்துள்ளார். மேலும், பிரகாஷ் ராஜ், ரோகிணி, ஆர்.ஜே.பாலாஜி, ரோபோ சங்கர், சதீஷ், சினேகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
‘வேலைக்காரன்’ படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்துள்ளார். வருகிற 22ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாகிறது. படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள், ‘யு’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். மொத்தம் 159 நிமிடங்கள் 41 விநாடிகள், அதாவது 2 மணி நேரம் 39 நிமிடங்கள் 41 விநாடிகள் ரன்னிங் டைமைக் கொண்டுள்ளது இந்தப் படம்.
தமிழ்நாடு மட்டுமின்றி, கேரளா மற்றும் ஆந்திராவிலும் சிவகார்த்திகேயனுக்கு ரசிகர்கள் உள்ளனர். எனவே, அங்கும் ‘வேலைக்காரன்’ ரிலீஸாகிறது. அதுவும், கேரளாவில் முன்னெப்போதைவிடவும் இந்தப் படம் சிவகார்த்திகேயனுக்கு ரொம்பவே ஸ்பெஷல். காரணம், மலையாள முன்னணி நடிகர்களுள் ஒருவரான ஃபஹத் ஃபாசில் வில்லனாக நடித்திருப்பதுதான்.
எனவே, கேரளாவில் உள்ள தன்னுடைய ரசிகர்களைச் சந்தித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். கேரள மாநிலம் கொச்சியில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து, ஆந்திராவுக்கும் சென்று தன்னுடைய ரசிகர்களைச் சந்திக்க உள்ளார் சிவகார்த்திகேயன்.
Actor @Siva_Kartikeyan in #Kerala doing #Velaikkaran promotions.. pic.twitter.com/M74V8uzzCO
— Ramesh Bala (@rameshlaus) December 18, 2017