scorecardresearch

பிப்ரவரியில் வெளியாகிறது சிவகார்த்திகேயன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், பிப்ரவரி மாதம் ரிலீஸாக இருக்கிறது.

பிப்ரவரியில் வெளியாகிறது சிவகார்த்திகேயன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், பிப்ரவரி மாதம் ரிலீஸாக இருக்கிறது.

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் – பொன்ராம் இருவரும் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். கிராமத்துக் கதையான இந்தப் படத்தில், சமந்தா ஹீரோயினாக நடிக்கிறார். 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கும் இந்தப் படத்தில், சூரி காமெடியனாக நடிக்கிறார். டி.இமான் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

இன்னும் இந்தப் படத்தின் தலைப்பு என்ன என்பதை அறிவிக்கவில்லை. தென்காசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிந்த நிலையில், 55 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன.

மூன்றாம் கட்ட படப்பிடிப்பு, இன்று தொடங்கியுள்ளது. சமந்தாவின் திருமணத்தை முன்னிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படப்பிடிப்பு, தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. விஷால் ஜோடியாக சமந்தா நடித்துவரும் ‘இரும்புத்திரை’ படத்தின் படப்பிடிப்பும் நாளை முதல் தென்காசியில் தொடங்க இருக்கிறது. ஆக, தென்காசியில் இருந்துகொண்டே இரண்டு படங்களிலும் நடிக்கப் போகிறார் சமந்தா.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி வெளியாகிறது. சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஃபஹத் ஃபாசில் நடிப்பில் உருவாகியுள்ள ‘வேலைக்காரன்’, அடுத்த மாதம் 22ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Sivakarthikeyan movie first look will release february 17th