சிவகார்த்திகேயன் படத்தின் பெயர் ‘சீம ராஜா’ : அன்றே சொன்னது ஐஇ தமிழ்!

சிவகார்த்திகேயன் நடிப்பில், பொன்ராம் இயக்கிவரும் படத்துக்கு ‘சீம ராஜா’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதைக் கடந்த வருடமே நமது ஐஇ தமிழ் தெரிவித்துவிட்டது.

சிவகார்த்திகேயன் நடிப்பில், பொன்ராம் இயக்கிவரும் படத்துக்கு ‘சீம ராஜா’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதைக் கடந்த வருடமே நமது ஐஇ தமிழ் தெரிவித்துவிட்டது.

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக பொன்ராம் இயக்கத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தை ஆர்.டி.ராஜாவின் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. சிவகார்த்திகேயனின் 12வது படம் இது.

இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தில், முதன்முறையாக சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்துள்ளார் சமந்தா. சூரி, சிம்ரன், நெப்போலியன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ளார். தென்காசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இன்று சிவகார்த்திகேயன் பிறந்த நாளை முன்னிட்டு நள்ளிரவு 12 மணிக்கு இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. படத்துக்கு ‘சீம ராஜா’ என்று பெயர் வைத்துள்ளனர்.

ஆனால், இந்தப் பெயரைத்தான் வைக்கப் போகின்றனர் என்பதைக் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 9ஆம் தேதியே நமது ஐஇ தமிழ் இணையதளத்தில் செய்தியாக வெளியிட்டுள்ளோம். (அதைப் படிக்க க்ளிக் செய்க)

×Close
×Close