சிவகார்த்திகேயன் 40 லட்சம், கீர்த்தி சுரேஷ் 10 லட்சம்… இது வேற கணக்கு

என் சகோதரர்கள், சகோதரிகள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு மிகப்பெரிய அன்பும், அரவணைப்பும்’ எனத் தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

By: November 17, 2017, 9:56:59 AM

சிவகார்த்திகேயன் 40 லட்சம் ஃபாலோயர்களையும், கீர்த்தி சுரேஷ் 10 லட்சம் ஃபாலோயர்களையும் ட்விட்டரில் பெற்றுள்ளனர்.

சமூக வலைதளங்களின் பயன்பாடு அதிகரித்த பிறகு, சினிமாக்காரர்கள் தாங்கள் சம்பந்தப்பட்ட பெரும்பாலான செய்திகளை ட்விட்டர் மூலமாகவே அறிவித்து விடுகின்றனர். இதனால், தனக்குப் பிடித்த நடிகர், நடிகைகளைப் பற்றி ரசிகர்களுக்கும் உடனடியாகத் தெரிந்துகொள்ள முடிகிறது.

இப்படி ட்விட்டரில் சிவகார்த்திகேயனை ஃபாலோ செய்பவர்களின் எண்ணிக்கை, 40 லட்சத்தைத் தாண்டியிருக்கிறது. நேற்று அவர் இந்தச் சாதனையைப் படைத்துள்ளார். ஆனால், அவர் 107 பேரை மட்டுமே ஃபாலோ செய்கிறார். ‘40 லட்சம் ட்வீட் இதயங்கள் இங்கு இருக்கின்றன. என் சகோதரர்கள், சகோதரிகள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு மிகப்பெரிய அன்பும், அரவணைப்பும்’ எனத் தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

கீர்த்தி சுரேஷை ஃபாலோ செய்பவர்களின் எண்ணிக்கை, 10 லட்சத்தைத் தாண்டியிருக்கிறது. ‘4 வருட ஆதரவிற்கு நன்றி. 5வது வருடத்தில் இருக்கிறேன். இன்னும் நிறைய செல்ல வேண்டியிருக்கிறது. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி’ என்று சொல்லியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இவர் 123 பேரை மட்டுமே ஃபாலோ செய்கிறார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Sivakarthikeyan reached 4 million followers and keerthy suresh reached 1 million followers in twitter

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X