/tamil-ie/media/media_files/uploads/2017/09/Z231.jpg)
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் ஃபாசில் ஆகியோர் நடித்துள்ள படம் வேலைக்காரன். 'ரெமோ' படத்தை தயாரித்த 24AM ஸ்டூடியோஸ் தான் இப்படத்தையும் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. ஏனெனில், 'தனி ஒருவன்' வெற்றிக்குப் பிறகு மோகன் ராஜா இயக்குவதால் இப்படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே அதிக எதிர்பார்ப்பு இருந்தது. டீசரை இதுவரை 4,011,029 பேர் பார்த்துள்ளனர்.
https://www.youtube.com/embed/XCFNH1Bo0eo
இதைத் தொடர்ந்து இப்படத்தின் 'கறுத்தவன்லாம் கலீஜாம்' எனும் பாடலை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. அனிருத் இசையில் தர லோக்கலாக இருந்த இப்பாடலும் சிறப்பான ரெஸ்பான்ஸ் பெற்றுள்ளது.
முன்னதாக, இப்படம் செப்டம்பர் 29-ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்படுவதாக தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டரில் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், படத்தின் இரு பாடல்கள் இன்னும் படமாக்கப்பட உள்ளதாகவும், சென்சார் சான்றிதழ் வாங்க 3 - 4 வாரங்கள் வரை ஆகும் என்பதாலும், படத்தின் ரிலீஸ் தேதி டிசம்பர் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அக்டோபர் மாதம் தீபாவளிக்கு வேறு சில பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீசாக உள்ளது. நவம்பர் மாதம் பெரிய பண்டிகை ஏதும் இல்லை. இதனால் கிறிஸ்துமஸ் விடுமுறையை கருத்தில் கொண்டு டிசம்பர் மாதம் படத்தை வெளியிட முடிவு செய்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Official Press Release regarding our Film #VelaikkaranReleaseDatepic.twitter.com/psJOpNa6y0
— 24AM STUDIOS® (@24AMSTUDIOS) 7 September 2017
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.