/tamil-ie/media/media_files/uploads/2017/06/a462.jpg)
'ரெமோ' வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயனும், 'தனி ஒருவன்' பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு மோகன் ராஜாவும் இணைந்துள்ள படம் 'வேலைக்காரன்'. சிவாவின் வழக்கமான காமெடி ஃபார்முலாவைத் தவிர்த்து, முழுக்க முழுக்க சீரியஸ் சப்ஜெக்டில் உருவாகியுள்ள திரைப்படம் இது. அதேபோன்று முதன்முதலாக சிவாவுடன் நயன்தாரா கூட்டணி சேர்ந்துள்ள படம். மலையாள சாக்லேட் பாய் பஹத் பாசில் வில்லனாக அவதரித்திருக்கும் படம். இப்படி பல இண்ட்ரஸ்டிங்கான விஷயங்கள் உள்ளதால், படத்தின் எதிர்பார்ப்பு எகிறி கிடக்கின்றது.
சமீபத்தில் இதன் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், வரும் செப்டம்பர் 29 ஆம் தேதி படம் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஒரு கையில் மெடிக்கல் ரெப் போன்று பையும், மற்றொரு கையில் ரத்தக்கறை படிந்துள்ள அரிவாளும் வைத்திருப்பது போன்று ஸ்டில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Inspired frm ur blessings nd love for Thanioruvan,I am elated to present u the first look of my next,indeed a prestigious one #VelaikkaranFLpic.twitter.com/pOpXOqREq5
— Mohan Raja (@jayam_mohanraja) 5 June 2017
இதை வைத்து பார்க்கும் போது, நல்ல பிள்ளையாக வேலைக்கு செல்லும் கோவக்கார இளைஞன், அநியாயத்தை வேரறுக்கும் கதை என்று தோன்றுகிறது. ஒருவேளை வசதி படைத்தவர்களால் எப்படி ஏழ்மை மக்கள் நசுக்கப்படுகின்றனர் என்று கூட படத்தில் சொல்லலாம். எது எப்படியோ... தனியொருவன் ஃபீல் படத்தில் இருந்தா சரி! அதைத் தான் மோகன் ராஜாவிடம் இருந்து ரசிகர்கள் இப்போது எதிர்பார்க்கிறார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.