Advertisment

சிவகார்த்திகேயன் - சமந்தா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் : இன்று ரிலீஸ்!

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - சமந்தா படத்தின் ஃபர்ஸ்ட் லுக், சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு இன்று இரவு ரிலீஸாக இருக்கிறது.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
sivakarthikeyan first look

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - சமந்தா படத்தின் ஃபர்ஸ்ட் லுக், சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு இன்று இரவு ரிலீஸாக இருக்கிறது.

Advertisment

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக பொன்ராம் இயக்கத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தை ஆர்.டி.ராஜாவின் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. சிவகார்த்திகேயனின் 12வது படம் இது.

இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தில், முதன்முறையாக சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்துள்ளார் சமந்தா. சூரி, சிம்ரன், நெப்போலியன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ளார். தென்காசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

சிவகார்த்திகேயனுக்கு நாளை பிறந்த நாள். எனவே, இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று இரவு 12 மணிக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Cinema Ponram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment