/tamil-ie/media/media_files/uploads/2017/08/z29.jpg)
ரெமோ' வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயனும், 'தனி ஒருவன்' பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு மோகன் ராஜாவும் இணைந்துள்ள படம் 'வேலைக்காரன்'. சிவாவின் வழக்கமான காமெடி ஃபார்முலாவைத் தவிர்த்து, முழுக்க முழுக்க சீரியஸ் சப்ஜெக்டில் உருவாகியுள்ள திரைப்படம் இது. அதேபோன்று முதன்முதலாக சிவாவுடன் நயன்தாரா கூட்டணி சேர்ந்துள்ள படம். மலையாள சாக்லேட் பாய் பஹத் பாசில் வில்லனாக அவதரித்திருக்கும் படம். இப்படி பல இண்ட்ரஸ்டிங்கான விஷயங்கள் உள்ளதால், படத்தின் எதிர்பார்ப்பு எகிறி கிடக்கின்றது.
சமீபத்தில் இதன் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், வரும் செப்டம்பர் 29 ஆம் தேதி படம் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜூன் ஐந்தாம் தேதி வெளியிடப்பட்டது. ஒரு கையில் மெடிக்கல் ரெப் போன்று பையும், மற்றொரு கையில் ரத்தக்கறை படிந்துள்ள அரிவாளும் வைத்திருப்பது போன்று ஸ்டில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இது ஆங்கில படத்தின் காப்பி என்று விமர்சிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, இன்று இப்படத்தின் அதிகாரப்பூர்வ செகண்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் சிவா மட்டும் சோலோ பெர்ஃபார்மன்ஸ் கொடுத்திருந்தார். ஆனால், இந்த போஸ்டரில் பகத் பாசிலும் தலையைக் காட்டியுள்ளார். விரைவில் படத்தின் டீசர், ட்ரெய்லரும் ரிலீஸ் ஆகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Happy birthday to one of the most finest actor in India @twitfahadh????????A small gift to him from team #Velaikkaran ... #Velaikkaran2ndLook ???????? pic.twitter.com/VBi0UxovOu
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) 7 August 2017
இன்று பஹத் பாசிலின் பிறந்தநாளை முன்னிட்டு, இந்த செகண்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.