ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டுடியோவில் சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘வேலைக்காரன்’ படத்தின் இறுதிக்கட்ட சவுண்ட் மிக்ஸிங் பணிகள், ஏ.ஆர்.ரஹ்மானின் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகின்றன.

By: Published: December 14, 2017, 4:25:29 PM

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘வேலைக்காரன்’ படத்தின் இறுதிக்கட்ட சவுண்ட் மிக்ஸிங் பணிகள், ஏ.ஆர்.ரஹ்மானின் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகின்றன.

சிவகார்த்திகேயன் நடிப்பில், மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வேலைக்காரன்’. நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில் வில்லனாக நடித்துள்ளார். மேலும், பிரகாஷ் ராஜ், ரோகிணி, ஆர்.ஜே.பாலாஜி, ரோபோ சங்கர், சதீஷ், சினேகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்துள்ளார். வருகிற 22ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டுடியோவில், இறுதிக்கட்ட சவுண்ட் மிக்ஸிங் பணிகளைச் செய்து வருகிறார் அனிருத். அதிநவீன வசதிகள் இந்த ஸ்டுடியோவில் இருப்பதால், சில இசையமைப்பாளர்கள் இந்த ஸ்டுடியோவைப் பயன்படுத்திக் கொள்வது வழக்கம். அதன்படி, அனிருத்தும் ‘வேலைக்காரன்’ பணிகளை ஏ.ஆர்.ரஹ்மானின் ஸ்டுடியோவைப் பயன்படுத்தி செய்து வருகிறார்.

டிசம்பர் 22ஆம் தேதி, ‘வேலைக்காரன்’ படத்துடன் சந்தானம் நடித்துள்ள ‘சக்க போடு போடு ராஜா’ படமும் ரிலீஸாகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Entertainment News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Sivakarthikeyans velaikkaran sound mixing going at ar rahman studio

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X