கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்ற கவிஞர் சினேகன் திருமணம்; மகிழ்ச்சியான தருணங்கள்

கவிஞர் சினேகன் – நடிகை கன்னிகா திருமணத்தை இன்று சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையேற்று நடத்திவைத்தார்.

பிரபல சினிமா பாடல் ஆசிரியர் கவிஞர் சினேகன் – நடிகை கன்னிகா திருமணம் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. சினேகன் திருமண நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இங்கே காணலாம்.

பிரபல சினிமா பாடல் ஆசிரியர் கவிஞர் சினேகன். இவர் தமிழ் சினிமாவில் 700க்கும் மேற்பட்ட படங்களில் பாடல் எழுதியுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் சினேகன் பெரிய அளவில் பிரபலமானார்.

கவிஞர் சினேகன் கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து அக்கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ளார். கவிஞர் சினேகன் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் தொலைக்காட்சி ஊடகங்களில் நடைபெறும் விவாதங்களில் பங்கேற்று வந்தார்.

தமிழ் சினிமா உலகில் வெற்றிகரமான பாடலாசிரியராக வலம் வந்த கவிஞர் சினேகன், தொலைக்காட்சி சீரியல் நடிகை கன்னிகாவை காதலித்து வந்தார். ‘தேவராட்டம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை கன்னிகா, தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். இருவரும் கடந்த எட்டு ஆண்டுகளாக காதலித்துவந்த நிலையில், திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்.

இந்த நிலையில், கவிஞர் சினேகன் – நடிகை கன்னிகா திருமணத்தை இன்று சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையேற்று நடத்திவைத்தார்.

சினேகன் திருமண நிகழ்வுக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர். சினேகன் – கன்னிகா தம்பதியர் மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு மிகப்பெரிய மாலை அணிவித்து வரவேற்றனர்.

கவிஞர் சினேகன் – நடிகை கன்னிகா திருமணத்திற்கு வருகை தந்தை இயக்குனர் பாரதிராஜா மற்றும் கமல்ஹாசன் தம்பதியரை வாழ்த்தினார்கள்.

சினேகன் – கன்னிகா திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குனர் அமீர் வாழ்த்துரை வழங்கி பேசினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Snehan kannika marriage led by mnm president kamal haasan

Next Story
Tamil Serial Rating : தவறை மறைக்க என்னெல்லாம் செய்கிறார் பாருங்க… ரசிகர்களிடம் மாட்டிய பாக்கியலட்சுமி கோபி
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express