நடிகர் அர்ஜுன் கதை எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் படம் ‘சொல்லி விடவா’. இதில், அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் ஹீரோயினாக நடிக்க, சந்தன் குமார் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும், சுஹாசினி, கே.விஸ்வநாத், சதீஷ், யோகிபாபு, மனோபாலா ஆகியோரும் நடித்துள்ளனர். ஜாஸ்ஸி கிஃப்ட் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். ஜனவரி மாதம் இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.
