Advertisment

விஜய் டி.வி டான்ஸ் ஷோ மூலமாக அறிமுகம்: தென் இந்தியாவை கலக்கும் இந்த நடிகை யாருன்னு தெரியுதா?

தென்னிந்தியாவை கலக்கி வரும் ஒரு முன்னணி நடிகையின் சிறு வயது புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. பலரும் யார் இந்த நடிகை என்று கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
actress Sai Pallavi, actress Sai Pallavi photos, South India Popular actress Sai Pallavi young age photos goes viral, can you find who is this, விஜய் டி.வி டான்ஸ் ஷோ மூலமாக அறிமுகமான சாய் பல்லவி, சாய் பல்லவி, தென் இந்தியாவை கலக்கும் சாய் பல்லவி, சய் பல்லவி சிறுவயது புகைப்படம், - South India Popular actress sai pallavi, sai pallavi young age photos

தென் இந்தியாவை கலக்கும் நடிகையின் சிறுவயது புகைப்படம்

சினிமா உலகில் தென் இந்தியாவை கலக்கி வரும் முன்னணி நடிகையின் சிறு வயது புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் இருப்பவர் யார் என்று கண்டுபிடிங்க பார்க்கலாம்.

Advertisment
publive-image

இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் சமீப காலமாக முன்னணி நடிகர்கள், நடிகைகள், பிரபலங்களின் சிறு வயது புகைப்படம் வெளியிடப்பட்டு இது யாருடைய புகைப்படம் என்று கண்டுபிடிக்க முடியுமா என சவால் விடும் செய்திகள் வெளியாகி நெட்டிசன்கள் இடையே வைரலாகி வருகிறது.

publive-image

அந்த வகையில், தென்னிந்தியாவை கலக்கி வரும் ஒரு முன்னணி நடிகையின் சிறு வயது புகைப்படம் வெளியாகி உள்ளது. பலரும் யார் இந்த நடிகை என்று கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். பிறகு, யாருடைய புகைப்படம் என்று தெரியவரும்போது, அட இவர்தானா என்று ஆச்சரியத்தில் மூழ்கிப் போகிறார்கள்.

இந்த புகைப்படத்தில் இருப்பவர் யார் என்று தெரிந்துகொள்ள ஒரு குறிப்பு தருகிறோம், புகைப்படத்தில் இருக்கும் நடிகை விஜய் டிவி டான்ஸ் ஷோ மூலம் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் கலக்கி வருகிறார்.

publive-image

இதற்கு மேலும் பீடிகைத் தேவையில்லை, இந்த புகைப்படத்தில் இருப்பவர், வேறு யாரும் இல்லை, தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை சாய் பல்லவி தான்.

நடிகை சாய் பல்லவி சிறு வயதில் பள்ளி பருவத்தில் எடுத்த புகைப்படம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

publive-image

சாய் பல்லவி நடிப்பில் கடைசியாக கார்கி எனும் திரைப்படம் தமிழில் வெளிவந்து ஹிட்டானது. அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து எஸ் கே 21 படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த சாய் பல்லவி, தனது பள்ளி படிப்பை கோவையிலும், தனது மருத்துவ படிப்பை ஜோர்ஜியாவிலும் முடித்தார்.

சிறு வயதில் இருந்தே டான்ஸ் மீது அதிக ஆர்வம் கொண்ட சாய் பல்லவி விஜய் டிவியில் ஒளிபரப்பான டான்ஸ் ஷோ ஒன்றில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டார்.

சாய் பல்லவி பிரேமம் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ், மலையாளம் சினிமா ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றார்.

publive-image

தென்னிந்தியாவில் தனக்கென மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை கொண்டுள்ள சாய் பல்லவியின் டீன் ஏஜ் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. தற்போது சாய் பாலாவின் புகைப்படங்கள் இணையத்தளத்தில் ஏகப்பட்ட லைக்குகளுடன் வைரலாகி வருகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Sai Pallavi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment