பாலிவுட், கோலிவுட், டோலிவுட், மாலிவுட் என இந்திய சினிமாவின் எந்த பக்கம் திரும்பினாலும், ஒன்றாக நடித்த நடிகர், நடிகைகளுக்கு காதல் மலர்ந்து திருமண வாழ்க்கைக்குள் நுழைந்திருக்கின்றனர். அந்த பட்டியலில் புதிதாக இடம்பெற்றிருப்பவர்கள் நாக சைத்தன்யா மற்றும் சமந்தா. அவர்களது திருமணம் கோவாவில் வெள்ளிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. இவர்களுக்கு முன்னர் இந்திய சினிமாவில் தங்களுக்குள் காதல் மலர்ந்து திருமணம் செய்துகொண்ட நாயகர் – நாயகிகளின் பட்டியல் இதோ:
