scorecardresearch

யாராலும் வெறுக்கப்படாத கலைஞன்! மனிதநேய மாண்பாளன்! இளையநிலா எஸ்.பி.பி

“சின்ன பசங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்களுக்கும் வாய்ப்புக் கொடுங்க, அவங்களும் வளரட்டும்”

Singer SP Balasubrahmanyam, SPB Songs, SPB KJ Yesudas
எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

S.P.Balasubrahmanyam: தமிழின் மிகச் சிறந்த பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நேற்று மதியம் தனது இறுதி மூச்சை சுவாசித்தார். கொரோனான் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு கடந்த ஆகஸ்ட்-5ம் தேதி முதல் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவரது உடல்நிலை நேற்று முன்தினம் மோசமடைந்தது. இதனையடுத்து சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் அவரது உயிர் பிரிந்தது.

எம்.ஜி.ஆர் முதல் அனிருத் வரை – எஸ்.பி.பி நினைவலைகள்

இது பிரபலங்கள் மத்தியிலும், இசை ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும், துக்கத்தையும் ஏற்படுத்தியது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 40,000-க்கும் அதிகமான பாடல்களை பாடியிருக்கிறார் எஸ்.பி.பி. அதனால் இந்தியா முழுவதும் உள்ள இசை ரசிகர்கள் அனைவருமே அவருக்கு சமூக வலைதளங்களில் பிரியா விடை அளித்து வருகின்றனர்.

எஸ்.பி.பி-யை நினைவுக்கூறும் பிரபலங்கள் பலர், அவரது எளிமையையும், மனித நேயத்தையும் பெருமையுடன் போற்றுகிறார்கள். இதற்கு சான்றாக சில விஷயங்களை சொல்லலாம். சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்கு செல்லும் போது பம்பையிலிருந்து மலை ஏற முடியாதவர்களை ஒரு சாய்வான சேரில் அமர வைத்து, தங்கள் தோளில் சுமந்து செல்லும் பணியை சிலர் செய்து வருகிறார்கள். அவர்களை ‘டோலி சுமப்பவர்’ என்று அழைப்பதுண்டு.

அந்த மாதிரி ஒரு சமயத்தில், எஸ்.பி.பி-யும் டோலியில் அமர நேர்கிறது. அந்த சேரில் அமர்வதற்கு முன்பாக, அதை சுமப்பவர்கள் காலை தொட்டு வணங்குகிறார். சராசரி மனிதன் செய்ய தயங்கும் அல்லது செய்ய மறக்கும் இதனை, மிகப்பெரிய திரையிசை ஆளுமையான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் செய்து, நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறார்.

அதே போல் சக கலைஞர்களை அளவில்லாமல் நேசித்தவர் எஸ்.பி.பி. என்றால் அது மிகையில்லை. காரணம் எஸ்.பி.பி-யின் தேதியோ அல்லது பட்ஜெட்டிலோ முரண்பாடு ஏற்படும் போது, அவருக்கு மாற்றாக பாடகர் மனோ அணுகப்பட்டார். மற்றவர்கள் என்றால் நிச்சயம் கோபித்துக் கொள்வார்கள். ஆனால் எஸ்பிபி அப்படியில்லை, நமக்கு பின்னால் இன்னொருவரும் வளர்கிறார் என்று மகிழ்ச்சியடைந்திருக்கிறார். மனோவும் எஸ்.பி.பி-யை மூத்த சகோதரரைப் போல் எண்ணினார். தனக்கு நெருக்கமானவர்களிடம், “ஏன்யா என்னையே கூப்பிடுறீங்க, சின்ன பசங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்களுக்கும் வாய்ப்புக் கொடுங்க, அவங்களும் வளரட்டும்” என்பாராம். இப்படி தனக்கு வரும் வாய்ப்புகளை மற்றவர்களுக்குக் கொடுக்கச் சொல்லும் அந்த மனது வேறு யாருக்கு வரும்.

எத்தனை உயரத்தை தொட்டாலும், பிரபல பாடகர் கே.ஜே.ஏசுதாஸ் போல பாட முடியாது என்று, எப்போதும் அவரை தனது மானசீக குருவாக கொண்டாடுவார் எஸ்.பி.பி. அதன் வெளிப்பாடாக, சினிமா பின்னணி பாடகராகி 50 ஆண்டுகள் ஆனதையொட்டி, கனடா, மலேசியா, ரஷியா, இலங்கை, துபாய், அமெரிக்கா என உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சிகள் நடத்திவிட்டு சென்னை திரும்பியபோது, பின்னணி பாடகர் ஏசுதாசையும், அவரது மனைவி பிரபாவையும் மேடைக்கு அழைத்து அவர்களுக்கு, எஸ்.பி.பாலசுப்பிரமணியமும், அவரது மனைவி சாவித்ரியும் பாத பூஜை செய்து, கால்களில் விழுந்து வணங்கினார்கள்.

‘பாலு எங்க போன? உலகம் சூனியமா போச்சு…’ துயரத்தில் தவிக்கும் இளையராஜா

”என் குரு ஜேசுதாஸ். அவருக்கு காணிக்கை செலுத்தும் விதமாக நான் பாத பூஜை செய்தேன். அவர் ஒரு ரிஷி, யோகி. அவர் மாதிரி ஒரு குரல் கிடைப்பது பூர்வஜென்ம புண்ணியம்” என்று உணர்ச்சி மேலிட கூறினார் எஸ்.பி.பி. ”எஸ்.பி.பாலசுப்பிரமணியம் என் உடன்பிறந்த சகோதரரை போன்றவர். அவருக்கு சரஸ்வதியின் ஆசி இருக்கிறது. அவர் எனது சொந்த தம்பி. எங்கள் இருவருக்கும் சரஸ்வதியின் அருள் இருக்கிறது. நாங்கள் ஒருதாய் வயிற்றில் பிறக்காத சகோதரர்கள்” என்றார் ஏசுதாஸ்.

உண்மை தான் அவர் வெறும் பாடகர் மட்டுமல்ல…!

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Sp balasubrahmanyam singer video spb respect to kj yesudas