25 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் - கே.ஜே.ஜேசுதாஸ்

‘தளபதி’ படத்திற்குப் பிறகு 25 ஆண்டுகள் கழித்து எஸ்.பி.பாலசுப்பிரமணியம் - கே.ஜே.ஜேசுதாஸ் இருவரும் இணைந்து ஒரு பாடலைப் பாடியிருக்கின்றனர்.

பின்னணிப் பாடகர்களான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் – கே.ஜே.ஜேசுதாஸ் இருவரும் 25 வருடங்கள் கழித்து இணைந்துள்ளனர்.

மலையாள இயக்குநரான எம்.ஏ.நிஷாத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘கேணி’. தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்துக்கு, தாஸ் ராம்பாலா வசனம் எழுதியிருக்கிறார். தமிழ்நாடு – கேரள எல்லையில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு இந்தப் படம் உருவாகியிருக்கிறது.

இந்த நாட்டின் முக்கியப் பிரச்னையாக இருக்கக்கூடிய தண்ணீர் தட்டுப்பாடு குறித்து விரிவாகப் பேசுகிறது ‘கேணி’ படம். பெண்களை மையப்படுத்திய இந்தப் படத்தில் ஜெயப்பிரதா, ரேவதி, ரேகா, அனுஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர். நாசர், பார்த்திபன் இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்க, இவர்களுடன் சேர்ந்து ஜாய் மேத்யூ, எம்.எஸ்.பாஸ்கர், தலைவாசல் விஜய், பிளாக் பாண்டி ஆகியோரும் நடித்துள்ளனர்.

பாடல்களுக்கு எம்.ஜெயச்சந்திரன் இசையமைக்க, ‘விக்ரம் வேதா’ சாம் சி.எஸ். பின்னணி இசை அமைக்கிறார். பழனிபாரதி அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ளார். ‘தளபதி’ படத்திற்குப் பிறகு 25 ஆண்டுகள் கழித்து எஸ்.பி.பாலசுப்பிரமணியம் – கே.ஜே.ஜேசுதாஸ் இருவரும் இணைந்து ஒரு பாடலைப் பாடியிருக்கின்றனர்.

×Close
×Close