பாலிவுட்டில் அறிமுகமாகும் நடிகை ஸ்ரீதேவி மகள்

ஷஷாங்க் கெய்தன் இயக்கும் ‘தாடக்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார் ஜான்வி. மராத்தியில் வெளியாகி பட்டையைக் கிளப்பிய ‘சாய்ரத்’ படத்தின் ரீமேக்தான் இந்தப் படம்.

ஷஷாங்க் கெய்தன் இயக்கும் ‘தாடக்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார் ஜான்வி. மராத்தியில் வெளியாகி பட்டையைக் கிளப்பிய ‘சாய்ரத்’ படத்தின் ரீமேக்தான் இந்தப் படம்.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
jhanvi kapoor, ishaan khatter, dhadak

பிரபல நடிகையான ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி, பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

Advertisment

சிவகாசியைச் சேர்ந்த ஸ்ரீதேவி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்திப் படங்களில் நடித்துள்ளார். தயாரிப்பாளரான போனி கபூரைத் திருமணம் செய்துகொண்டு மும்பையிலேயே செட்டிலான ஸ்ரீதேவி, தற்போது ஹிந்திப் படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘மாம்’.

ஸ்ரீதேவி - போனி கபூருக்கு ஜான்வி மற்றும் குஷி என இரண்டு மகள்கள் உள்ளனர். 19 வயதான இவரை ஹீரோயினாக நடிக்கவைக்க, பல வருடங்களாகவே தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் முயற்சி செய்து வந்தனர். ஆனால், மகளின் படிப்பைக் காரணம் காட்டி மறுத்துவந்த ஸ்ரீதேவி, தற்போது சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

பிரபல தயாரிப்பாளரான கரண் ஜோஹர்தான் ஸ்ரீதேவியின் மகளை அறிமுகப்படுத்தும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். ஷஷாங்க் கெய்தன் இயக்கும் ‘தாடக்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார் ஜான்வி. மராத்தியில் வெளியாகி பட்டையைக் கிளப்பிய ‘சாய்ரத்’ படத்தின் ரீமேக்தான் இந்தப் படம். ஜான்வி ஜோடியாக, பிரபல நடிகரான ஷாகித் கபூரின் சகோதரர் இஷான் காட்டெர் நடிக்கிறார். இவருக்கு 22 வயதாகிறது. இதுதான் இவருக்கும் முதல் படம்.

Advertisment
Advertisements

பெரும்பாலும் எல்லா முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள ஸ்ரீதேவி, தன்னுடைய நடிப்புத் திறமையால் எல்லோரையும் கவர்ந்தவர். பலரின் கனவுக்கன்னியாகத் திகழ்ந்தவர். அவரைப் போலவே அவர் மகளும் ஜெயிப்பாரா? என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Dhadak Movie Janhvi Kapoor Bollywood Producer Karan Johar Sridevi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: