தயாரிப்பாளர் போனி கபூர் சமீபத்தில் ஒரு பேட்டியில் மறைந்த நடிகையும், அவரின் மனைவியுமான ஸ்ரீதேவி குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். போனி கபூர் ப்ரொபோஸ் செய்த பிறகு ஸ்ரீதேவி பல மாதங்களாக பேசவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். கடைசியில் திருமணம் செய்து கொண்ட இருவருக்கும் 2 மகள்கள் ஜான்வி மற்றும் குஷி கபூர் உள்ளனர்.
இருவரும் 2018ல் ஸ்ரீதேவியின் மறைவுக்குப் பிறகு இவர்கள் திரைத்துறையில் அறிமுகமானார்கள்.
ஏபிபி லைவ் உடனான நேர்காணலில் பேசிய போனி கபூர், "நான் அவளை காதலித்தேன், நான் அவளை காதலிக்கிறேன், நான் இறக்கும் நாள் வரை நான் அவளை காதலிப்பேன். அவளை திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க எனக்கு நான்கு-ஐந்து-ஆறு வருடங்கள் ஆனது. நான் அவளை ப்ரொபோஸ் செய்த பிறகு 6 மாதங்கள் அவள் என்னிடம் பேசவில்லை. அவள் என்னிடம் , ‘உனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன, என்னிடம் எப்படி இப்படி பேச முடிகிறது?’ என்று கேட்டார்.
ஆனால் நான் என் மனதில் இருந்ததைச் சொன்னேன், பின்னர் அதிர்ஷ்டம் எனக்கு கைகொடுத்தது என்றார்.
தொடர்ந்து, நீண்ட கால உறவுகள் பற்றி பேசிய போனி, “ஒவ்வொரு வருடமும் ஒரு தம்பதியினருக்கு இடையேயான புரிதல் அதிகரித்துக்கொண்டே இருக்கும். யாரும் இங்கே பர்வெக்ட் கிடையாது. நானும் அப்படித் தான்.
நான் அப்போதே திருமணம் ஆனவன்… ஆனால் நான் ஒருபோதும் விஷயங்களை மறைக்கவில்லை. (மோனா) கடைசி வரை என் தோழியாகவே இருந்தார். உங்கள் துணையிடம் எப்போதும் உண்மையாக இருக்க வேண்டும், அதேபோல், உங்கள் குழந்தைகளுக்கும் நீங்கள் நேர்மையாக இருக்க வேண்டும். நான் என் குழந்தைகளின் நண்பன், நான் என் குழந்தைகளின் தாய், நான் என் குழந்தைகளின் தந்தை" என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“