ரஜினிக்காக ஒரு வாரம் விரதம் இருந்த ஸ்ரீதேவி sridevi fasting one week for rajinikanth | Indian Express Tamil

ரஜினிக்காக ஒரு வாரம் விரதம் இருந்த ஸ்ரீதேவி

ரஜினியின் உடல்நிலை சரியாக வேண்டி, ஸ்ரீதேவி ஒரு வாரம் விரதம் இருந்து வழிபட்ட விஷயம் வெளியாகி இருக்கிறது.

ரஜினிக்காக ஒரு வாரம் விரதம் இருந்த ஸ்ரீதேவி

ரஜினியின் உடல்நிலை சரியாக வேண்டி, ஸ்ரீதேவி ஒரு வாரம் விரதம் இருந்து வழிபட்ட விஷயம் வெளியாகி இருக்கிறது.

2011ஆம் ஆண்டு ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. எனவே சிகிச்சைக்காக சிங்கப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ரஜினி. அந்த சமயத்தில், ரஜினிக்காக ஒரு வாரம் விரதம் இருந்து வழிபட்டுள்ளார் ஸ்ரீதேவி. பின்னர், ஷீரடியில் உள்ள சாய்பாபா கோயிலுக்குச் சென்று தன்னுடைய விரதத்தை நிறைவு செய்துள்ளார்.

பல நாட்கள் கழித்து இந்த விஷயத்தை ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார் ஸ்ரீதேவி. “ரஜினி, கமல் இருவருமே எனக்கு நல்ல நண்பர்கள். என் அம்மாவுடன் ரஜினி எப்போதுமே நட்பாக இருப்பார். என் அம்மாவுக்கும் ரஜினியை ரொம்பப் பிடிக்கும்.

‘கமலைப் போல் பெரிய ஸ்டார் ஆக வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்?’ என ரஜினி என் அம்மாவிடம் கேட்டார். ‘கண்டிப்பாக நீ பெரிய ஸ்டாராக வருவாய்’ என்று அம்மா சொன்னார். ‘அப்போது 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்க வேண்டும்’ என ரஜினி சொன்னார். அதை இப்போது நினைத்தாலும் எனக்கு சிரிப்பு வந்துவிடும்” என ஸ்ரீதேவி அந்தப் பேட்டியில் கூறியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Sridevi fasting one week for rajinikanth

Best of Express