ரஜினி முகத்தில் காரி துப்பிய ஸ்ரீதேவி

பாரதிராஜா இயக்கிய ‘16 வயதினிலே’ படத்தில் நடித்தபோது, ஒரு காட்சிக்காக ரஜினியின் முகத்தில் காரி துப்பியிருக்கிறார் ஸ்ரீதேவி.

பாரதிராஜா இயக்கிய ‘16 வயதினிலே’ படத்தில் நடித்தபோது, ஒரு காட்சிக்காக ரஜினியின் முகத்தில் காரி துப்பியிருக்கிறார் ஸ்ரீதேவி.

பாரதிராஜா இயக்கத்தில் 1977ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘16 வயதினிலே’. இந்தப் படத்தின் மூலம்தான் இயக்குநராக அறிமுகமானார் பாரதிராஜா. இந்தப் படத்தில் பரட்டை கேரக்டரில் ரஜினியும், சப்பாணி கேரக்டரில் கமலும், மயில் கேரக்டரில் ஸ்ரீதேவியும் நடித்திருந்தனர்.

‘16 வயதினிலே’ படத்தின் ஒரு காட்சியில், கதைப்படி ரஜினியின் முகத்தில் ஸ்ரீதேவி காரி துப்ப வேண்டும். பொதுவாக, இப்படிப்பட்ட காட்சிகளில் முகத்தில் உமிழ்நீர் தெரியவேண்டும் என்பதற்காக, பல் துலக்கும் பேஸ்ட்டைக் கரைத்து, அந்த நுரையை முகத்தில் தடவி விடுவார்கள்.

ரஜினியோ, ஸ்ரீதேவியே நேரடியாகத் துப்பினால் காட்சி நன்றாக வரும் என்று சொல்லியிருக்கிறார். இதை ஸ்ரீதேவியிடம் சொன்னபோது, ‘முடியவே முடியாது’ என அவர் மறுத்துவிட்டாராம். அப்போது பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கே.பாக்யராஜ் வந்து சொன்னபோதும் மறுத்திருக்கிறார் ஸ்ரீதேவி.

எத்தனையோ பேர் சொல்லியும் ஸ்ரீதேவி மறுத்துவிட்டதால், கடைசியில் பாரதிராஜாவே வந்து சொல்ல, அதற்கும் மாட்டேன் என்று சொல்லியிருக்கிறார். அப்புறம் ரஜினியே வந்து சொன்ன பிறகுதான் அரை மனதுடன் ஒப்புக் கொண்டிருக்கிறார். அந்தக் காட்சி முடிந்த உடனேயே தன்னுடைய சேலைத் தலைப்பால் ரஜினியின் முகத்தைத் துடைத்த ஸ்ரீதேவி, டெட்டால் கொண்டுவரச் சொல்லி ரஜினி எவ்வளவு மறுத்தும் தானே சுத்தம் செய்திருக்கிறார். அதுமட்டுமல்ல, அன்று முழுவதும் ரஜினியிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டே இருந்தாராம் ஸ்ரீதேவி.

×Close
×Close