/tamil-ie/media/media_files/uploads/2017/09/vijay-750.jpg)
தெறி திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியது. அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரிலீஸ் ஆனது. இந்த நிலையில், அப்படத்தின் தொலைக்காட்சி உரிமைக்கு அதிக விலை கோரப்பட்டதால், அதன் உரிமம் விற்கப்படாமல் இருந்து வந்தது. அப்படத்தின் டிஜிடல் உரிமத்தை அமேசான் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும், தயாரிப்பாளடர் தாணுவிடம் இருந்து , வேலையில்லா பட்டதாரி 2 மற்றும் தெறி படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை சன் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
.@SunTV buys the broadcast rights of @urstrulyMahesh's Tamil movie “Spyder”.@ARMurugadoss@Rakulpreet#Spyder
— Sun TV (@SunTV) 13 September 2017
.@SunTV buys the broadcast rights of @actorvijay's #Theri and @dhanushkraja's #VelaiIllaPattathari2.@Atlee_dir@soundaryaarajni
— Sun TV (@SunTV) 12 September 2017
இதேபோல, ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்திருக்கும் ஸ்பைடர் திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமத்தையும் சன் தொலைக்காட்சி கைப்பற்றியது. மேலும், விவேகம், தானா சேர்ந்த கூட்டம், சத்யா, அறம், குரேபகாவலி, சிவகார்த்திகேயன்-வின்னேஷ் சிவன் மற்றும் சிவகார்த்திகேயன்-பொன்ராம் ஆகிய படங்களின் உரிமையைபும் சன் தொலைக்காட்சி கைப்பற்றியிருந்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.