பிரபல சீரியல் முக்கிய நடிகை மாற்றம்: சன் டிவி ‘நாயகி’க்கு அடித்தது லக்!

Sun TV actress Sushma joins Endrendum punnagai serial: ஜீ தமிழ் சீரியலில் நடிக்கும் சன் டிவி நடிகை சுஷ்மா; எந்த சீரியல் தெரியுமா?

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் என்றென்றும் புன்னகை சீரியலில் நடிக்க உள்ளதாக சன் டிவி நடிகை சுஷ்மா தெரிவித்துள்ளார்.

சன் டிவியில் ஒளிப்பரப்பான நாயகி சீரியல் மூலம் பிரபலமானவர் சுஷ்மா நாயர். பின்னர் சன் டிவியின் மற்றொரு சீரியலான திருமகள் சீரியலில் பிரகதி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

இந்த நிலையில் சுஷ்மா, ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ஹிட் சீரியல்களுள் ஒன்றான, என்றென்றும் புன்னகை சீரியலில் நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நான் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் என்றென்றும் புன்னகை சீரியலில் நடிக்கிறேன். என்னுடைய இந்த புதிய பயணத்திற்கு ஆதரவு தாருங்கள். இந்த சீரியலில் நான் ஸ்ரீநிதி நடித்த நிலா என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கிறேன். ஸ்ரீநிதி எப்போதும் அந்த கதாப்பாத்திரத்தில் நினைவு கொள்ளப்படுவார். என பதிவிட்டுள்ளார்.

இந்த சீரியலை நடிகை நீலிமா ராணி தயாரித்து வருகிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் முதல் இந்த சீரியல் வெற்றிகரமாக ஒளிப்பரப்பாகி வருகிறது. ஆனால், ஸ்ரீநிதி எதற்காக மாற்றப்பட்டார் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sun tv actress sushma joins endrendum punnagai serial

Next Story
பாகுபலி-2-வின் அடுத்த சாதனை… உலகளவில் 9,000 திரையரங்குகளில் ரிலீஸ்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com