Advertisment

ரசிகர்களின் நீண்ட நாள் கேள்விக்கு கிடைத்தது பதில்! சன் டிவி அனிதா சம்பத்தின் திடீர் கல்யாண காரணம்

அனிதாவிற்கு இது காதல் கல்யாணம் என்பது அனைவருக்கும்  தெரிந்த ஒன்று.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sun tv anchor anitha sampath marriage

sun tv anchor anitha sampath marriage

sun tv anchor anitha sampath marriage : தொலைக்காட்சிகளில் வரும் புது முகங்கள் சிலர் சம்மந்தமே இல்லாமல் திடீரென பிரபலமாவது உண்டு. அதற்கு காரணம் சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டாகும் மீம்ஸ் , ட்ரோல்ஸ் , டிக் டாக் போன்றவை தான்.

Advertisment

இப்படி ஒரே நைட்டில் ஓபாமா ஆனவர் தான் சன் டிவி அனிதா சம்பத். ஆரம்பத்தில் நியூஸ் 7 தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா. சன் டிவிக்கு மாறிய சில மாதங்களிலே இண்டர்நெட்டில் ஃபேமஸ் ஆகினார்.

அனிதாவின் பவ்யமான அழகு தான் பல இளம் ரசிகர்களை கவர்ந்தது. பின்னர் சர்க்கார் படத்தில் செய்தி வாசிக்கும் காட்சி ஒன்றில் நடித்து புகழ் பெற்றார். அவ்வளவு தான் அடுத்தடுத்த இவரின் பேட்டிகள் யூடியூப்பில் ஹிட் அடிக்க தொடங்கியது. எந்த பக்கம் திரும்பினாலும் அனிதா அனிதா ஹாஷ்டேக்குகள் தான்.

publive-image

இப்போது வெளியான சூர்யாவின் காப்பான் படத்திலும் கூட அனிதாவின் முகம் தான். இப்படி பீக்கில் இருந்த டைம்மில் அனிதாவிற்கு திடீரென்று திருமணம் நடைப்பெற்றது. அவரின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. இதனால் மீம்ஸ் கிரியேட்டர்கள் கவலையில் மீம்ஸ்களை போட்டு இணையப் பயனாளர்கள்களின் கவனத்தை திருப்பினர்.

அனிதாவின் திருமணத்திற்கு பிறகு ஏன் இந்த திடீர் திருமணம் என்ற கேள்வி தான் பலரும் எழுப்பி இருந்தனர். அதற்கான பதிலை அவரே பிரபல யூடியூப் வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். சமீபத்தில் இவர்கள் தலை தீபாவளி கொண்டாடினர்.

அனிதாவிற்கு இது காதல் கல்யாணம் என்பது அனைவருக்கும்  தெரிந்த ஒன்று. இவர்களின் காதல் பற்றி இருவருமே மனம் திறந்துள்ளனர். இதுவரை திரையில் வெறும் செய்திவாசிப்பாளராக மட்டுமே தெரிந்த அனிதாவின் மறுபக்கம் இந்த வீடியோ மூலம் தெரிய வந்துள்ளது.

publive-image

இந்த வீடியோ கடந்த 2 நாட்களாக யூடியூப்பில் ட்ரெண்ட் அடித்துள்ளது.  திருமண வாழ்க்கையில் பிஸியான அனிதா மீண்டும் தனது செய்தி வாசிப்பாளர் பணிக்கு திரும்பியுள்ளார்.

 

Sun Tv Tv Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment