விஜய் சேதுபதி படங்களைக் குறிவைக்கும் சன் டிவி

விஜய் சேதுபதி நடித்த படங்களின் சாட்டிலைட் உரிமைகளை வரிசையாகக் கைப்பற்றி வருகிறது சன் டிவி.

விஜய் சேதுபதி நடித்த படங்களின் சாட்டிலைட் உரிமைகளை வரிசையாகக் கைப்பற்றி வருகிறது சன் டிவி.

ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’. விஜய் சேதுபதியுடன் இணைந்து கெளதம் கார்த்திக், நிகாரிகா கோனிடேலா, காயத்ரி, விஜி சந்திரசேகர் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி, ‘எமன்’ உள்பட 8 கேரக்டர்களில் நடித்துள்ளார்.

ஜஸ்டின் பிரபாகரன் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். குடியரசு தின விடுமுறையை முன்னிட்டு ஜனவரி 26ஆம் தேதி இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகின்றனர். இந்தப் படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி வாங்கியுள்ளது.

அதுமட்டுமல்ல, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் ‘96’ படத்தின் சாட்டிலைட் உரிமையையும் சன் டிவி வாங்கியுள்ளது. விஜய் சேதுபதி ஜோடியாக த்ரிஷா நடித்துவரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் நடைபெற்றுள்ளது. ஜனகராஜ், காளி வெங்கட், ‘ஆடுகளம்’ முருகதா ஆகியோர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.

சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் மேனன் இசையமைக்கிறார். மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் சார்பில் நந்தகோபால் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். 1996ஆம் ஆண்டு நடைபெறுவதாக அமைந்துள்ள இந்தக் கதையில், ஸ்கூல் மாணவர்களாக விஜய் சேதுபதி – த்ரிஷா இருவரும் நடித்துள்ளனர்.

×Close
×Close