/tamil-ie/media/media_files/uploads/2018/02/sivakarthikeyan.jpg)
cinema news
சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிக்குமார் இயக்க இருக்கும் படத்தை, ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பே சாட்டிலைட் உரிமையை சன் டிவி வாங்கியுள்ளது.
மோகன் ராஜா இயக்கிய ‘வேலைக்காரன்’ படத்தைத் தொடர்ந்து, பொன்ராம் இயக்கத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். தென்காசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார். சூரி காமெடியனாக நடிக்க, டி.இமான் இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜாவின் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
இந்தப் படத்துக்குப் பிறகு, ‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ஆர்.ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். ‘இன்று நேற்று நாளை’ படத்தைப் போல் இந்தப் படமும் சயின்ஸ் பிக்ஷன் படமாக எடுக்கப்பட இருக்கிறது. இந்தப் படத்தையும் ஆர்.டி.ராஜாவின் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்தப் படத்தின் சாட்டிலைட் உரிமையை, சன் டிவி வாங்கியுள்ளது. சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய மார்க்கெட் இருப்பதால், ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பே இந்தப் படத்தின் சாட்டிலைட் உரிமை விற்கப்பட்டுள்ளது. அத்துடன், விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் ஆகிய நிறுவனங்களும் சிவகார்த்திகேயன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்க போட்டிபோடும் என்பதால், அதிலிருந்து தப்பிக்க முன்னதாகவே படத்தை வாங்கியுள்ளது சன் டிவி.
.@SunTV buys the broadcast rights of @Siva_Kartikeyan’s upcoming movie directed by #RRavikumar.
— Sun TV (@SunTV) 13 February 2018
சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா நடிப்பில் வெளியான ‘காக்கிச்சட்டை’ படத்தின் சாட்டிலைட் உரிமையையும் சன் டிவி ஏற்கெனவே வாங்கியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.