Advertisment

Sun TV Serial: தர்ஷிணியை தேடி வந்த ஆண் நண்பர்; குணசேகரன் செய்தது சரியா? சூடான விவாதம்

சன் டிவியில் பார்வையாளர்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்று ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலை நிஜ வாழ்க்கையோடு தொடர்புபடுத்தி ரசிகர்கள் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sun TV Ethir Neechal Serial, Gunasekaran shouting Dharshini for group studying with her friend, Sun TV Serial, Ethir Neechal Serial, தர்ஷிணியை தேடி வந்த ஆண் நண்பர், குணசேகரன் செய்தது சரியா, சூடான விவாதம், Sun TV, Ethir Neechal, Gunasekaran shouting Dharshini

எதிர்நீச்சல் சீரியல்

சன் டிவியில் பார்வையாளர்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்று ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலை நிஜ வாழ்க்கையோடு தொடர்புபடுத்தி ரசிகர்கள் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

எதிர்நீச்சல் சீரியலில் தர்ஷினியை பார்ப்பதற்காக அவருடைய ஆண் நண்பர் வீட்டிற்கு வந்து இருக்கும்போது, கோபமாகி குணசேகரன் திட்டிக் கொண்டிருக்கிறார்.

நிஜ வாழ்க்கையில் இப்படி ஒருவர் திட்டினால் சரியா? தவறா என யோசிக்கும் நெட்டிசன்கள், குணசேகரன் செய்தது சரி என்று ஒரு தரப்பினரும், தவறு என்று இன்னொரு தரப்பினரும் மாறுபட்ட கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் டி.ஆர்.பி-யில் முன்னணி இடத்தில் இருந்து வருகிறது. கடந்த சில வாரங்களாக டி.ஆர்.பி-யில் முதல் இடத்தில் இருந்த இந்த சீரியல் இந்த வாரம் 2-வது இடத்திற்கு வந்துள்ளது என்றாலும், மிகவும் குறைவான புள்ளிகள் வித்தியாசத்தில்தான் 2வது இடத்தில் இருக்கிறது. இந்த சீரியலுக்கு பார்வையாளர்கள், ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர்.

எதிர்நீச்சல் சீரியலில் பெண் அடிமை தனத்திற்கு எதிராக பேசப்படுவதால் பலதரப்பட்ட பார்வையாளர்களும் ஆதரவு கொடுத்து வருகின்றனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண்கள், பெண்கள் என எல்லா தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் நேற்றைய எபிசோடில், தர்ஷினியை பார்ப்பதற்காக அவருடைய நண்பர் வந்து இருப்பார். அதை பார்த்து கடுப்பான குணசேகரன் வழக்கம் போல தர்ஷினியைத் திட்டுகிறார். அதோடு விட்டுவிடாமல், தர்ஷினியின் நண்பரையும் இது யார் வீடு தெரியுமா? நீ இப்படி ஒரு பொம்பள புள்ளைய பார்ப்பதற்காக வீட்டுக்கே வருவியா? என்று திட்டுகிறார்.

தர்ஷினி, குணசேகரன் பேசுவதைக் கேட்காமல், தனது நண்பரை கையைப் பிடித்து அழைத்துச் சென்று தனது அறையில் இருவரும் லேப்டாப்பில் படித்துக் கொண்டிருக்கின்றனர்.

தர்ஷினி ஏற்கெனவே, குணசேகரனிடம் தனது நண்பன் எக்ஸாம் இருக்கு அதுக்கு நோட்ஸ் வாங்குவதற்காக வந்திருக்கிறான் என்று கூறி இருந்தாலும், அவர்கள் உள்ளே கதவை பூட்டிக்கொண்டு படிப்பதை பார்த்து கோபம் அடையும் குணசேகரன் மீண்டும் மேலே வந்து திட்டுகிறான்.

இதற்கு ஈஸ்வரி முதல் வீட்டில் இருக்கும் அனைத்து மருமகள்களும் தர்ஷினிக்கு ஆதரவாகப் பேசுகிறார்கள். தப்பு பண்றவங்க எதுக்காக நம்ம வீட்டுக்கே வரணும். நம்ம குழந்தைகளை நாம தானே நம்பணும் இப்படி அசிங்கமா பேசாதீங்க என்று ஈஸ்வரி குணசேகரனை எதிர்த்து பேசுகிறார்.

இந்நிலையில், குணசேகரன் படிக்கிறவங்க எதுக்கு கதவை பூட்டிக்கிட்டு படிக்கணும். நானும் இந்த வயசு எல்லாம் கடந்து தான் வந்து இருக்கேன். இந்த வயசுல பசங்க என்ன மாதிரி புத்தியில் இருப்பார்கள் என்று எனக்கு தெரியும் என்று சொல்கிறார்.

அதற்கு ஈஸ்வரி உங்கள மாதிரி எல்லாரையும் நினைக்காதீங்க என்று திட்டுகிறார். அதைத் தொடர்ந்து இன்று வெளியான புரோமோவில், குணசேகரன் திட்டுவதால் இந்த மாதிரி காட்டுமிராண்டிங்க இடத்துக்கு நான் இவனை வர சொன்னது தப்புதான் என்று தர்ஷினி பேசுகிறார். தற்போது இது குறித்துதான் சமூக வலைதளத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த புரோமோவைப் பார்த்த சீரியலின் பார்வையாளர்கள், ரசிகர்கள், நெட்டிசன்கள் சிலர், ஒரு மகள் தனது தந்தையை இப்படி பேசலாமா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும், குணசேகரன் சொல்லுவதிலும் நியாயம் இருக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் 2k கிட்ஸ் அவசர முடிவுகளில் சிக்கி கொள்கிறார்கல். அதனால், அவர்களுக்கு வாழ்க்கையை புரிய வைக்க வேண்டும் என்கிறார்கள். அதே நேரத்தில், குழந்தைகளிடம் பெற்றோர்கள் மனம் விட்டுப் பேசி அவர்களைப் புரிந்துகொள்ள வேண்டும், அவர்களின் உலகத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற கருத்துகளும் முன்வைக்கப்பட்டு வருகிறது.

எதிர்நீச்சல் சீரியல் பெண் அடிமைத்தனத்துக்கு எதிராக இருக்கிறது சரிதான். ஆனால், தற்போது உள்ள நடைமுறைக்கு தகுந்த மாதிரி இருக்க வேண்டும் என்று கூறினார்.

Sun Tv
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment