பறந்து போன பறவைகள் : சன் டிவி-யை தாங்கிப் பிடிக்கும் தற்போதைய ’ஆங்கர்கள்’ இவர்கள் தான்!

கடந்த வருடம் அங்கிருந்த அஞ்சனா ஜீ தமிழுக்கும், மணிமேகலை விஜய் டிவி-க்கும் போனார்கள்.

Sun TV Anchors : சீரியல்கள் மட்டுமல்ல, பொழுதுபோக்கு மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கும் தனக்கென ஓர் அடையாளத்தையும், பாணியையும் கொண்டிருக்கிறது சன் டிவி. தொகுப்பாளர்கள் என்றால் இப்படித்தான் என அவர்களுக்கான அடையாளத்தையும் கொடுத்தது. ’உங்கள் சாய்ஸ்’ பெப்ஸி உமா, ’இளமை புதுமை’ சொர்ணமால்யா என பலரை இங்கு நினைவுக் கூற முடியும்.

கவனம் ஈர்த்த மெலானியா, இவான்கா டிரெஸ் கோட் – அப்படி என்ன ஸ்பெஷல்?

அனைத்து வயது ரசிகர்களுக்கும் ஏற்றபடி, கச்சிதமான தொகுப்பாளர்களை தங்கள் வசம் வைத்திருந்தது சன் டிவி. அதே நேரத்தில் இளைஞர்களை கவரும் விதத்தில் சன் மியூஸிக் சேனல் உதயமானபோது, இளைஞர் பட்டாளத்தை அழைத்து வந்து தொகுப்பாளர்களாக்கியது. ஆனந்த கண்ணன், பிரஜின், லிங்கேஷ், அனிஷா என அந்த ஆங்கர்களின் பட்டியல் நீளும். தங்களின் முழு எனர்ஜியுடனும், துள்ளல் கலந்த ஸ்டைலுடனும் பள்ளி, கல்லூரி வயது ரசிகர்களை பெரிதும் ஈர்த்தனர் அந்த தொகுப்பாளர்கள்.

கால ஓட்டத்தில் ஒவ்வொரு தொகுப்பாளரும், தனிப்பட்ட வேலை, தொழில், வெளிநாடு என தத்தம் பாதைகளில் சென்று விட, கடந்த வருடம் அங்கிருந்த அஞ்சனா ஜீ தமிழுக்கும், மணிமேகலை விஜய் டிவி-க்கும் போனார்கள். அதற்கு முன்பே பிரியங்காவும் விஜய் டிவி சென்று விட்டார். சமீபத்தில் சன் குழுமத்திலிருந்து ஆதவன், மதுரை முத்து இருவரும் விஜய் டிவி-க்கு சென்று விட்டனர். அதற்கு முன்பே ஆதித்யா டிவி-யில் இருந்த அசாரும், டி.எஸ்.கே-வும் விஜய் டிவி-யின் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்றனர். ‘அசத்தப் போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஈரோடு மகேஷ், பல ஆண்டுகளுக்கு முன்பே விஜய் டிவி-யில் குடி புகுந்தார்.

இந்நிலையில் தற்போது சன் டிவி-யை தாங்கிப் பிடிக்கும் ஆங்கர்கள் யார் யார் எனப் பார்ப்போம்.

ஒரு தார்மீக அறம் வேண்டாமா? சினிமா டைட்டில்களை திருடும் சீரியல்கள்…

ஆஸார்

Vanakkam Thamizha Azhar

சன் டிவி-யின் பிரேக் ஃபாஸ்ட் ஷோ-வான ‘வணக்கம் தமிழா’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். கூடவே சிறப்பு நிகழ்ச்சிகளையும்.

அஸ்வத்

Vanakkam Thamizha Ashwath

இவரும் வணக்கம் தமிழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். அவ்வப்போது செலிபிரட்டி இண்டர்வியூக்களும்…

ராகேஷ்

VJ Rakesh

சன் மியூஸிக் தொகுப்பாளரான இவர், சன் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

நக்‌ஷத்ரா நாகேஷ்

Nakshathra Nagesh

சன் டிவி-யில் ஆங்கரான நக்‌ஷத்ரா, அத்தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’ சீரியலின் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவ்வப்போது முக்கிய நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகிறார்.

பவித்ரா

Bavithra

வணக்கம் தமிழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பவித்ரா, தற்போது சன் டி.வி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘நிலா’ சீரியலில் டைட்டில் ரோலில் நடிக்கிறார். ராகேஷுடன் இணைந்து, சன் சிங்கர் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறார்.

தியா மேனன்

Diya Menon

சன் மியூஸிக்கில் தொகுப்பாளினியாக இருந்த தியா, தற்போது சன் டி.வி-யில் செலிபிரட்டி இண்டர்வியூ போன்ற முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்.

ஐஸ்வர்யா

Aishwarya

’வணக்கம் தமிழா’ மற்றும் பண்டிகைக்கால சிறப்பு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்

பார்வதி 

Parvathy

‘வணக்கம் தமிழா’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

Pujitha Devaraju

இவரும் ‘வணக்கம் தமிழா’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தவிர சில வெப் சிரீஸ்களிலும் நடிக்கிறார்.

Sastiga Rajendran

சன் டிவி-யில் விளம்பர அறிவிப்பின் போது வரும் குரல் சஸ்டிகாவினுடையது. சன் மியூஸிக்கில் ‘ஃப்ரீயா விடு’ என்ற லைவ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

 

 

 

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close