டிவியில் தினமும் உடற்பயிற்சி சொல்லித்தரும் சன்னி லியோன்

டிவியில் உடற்பயிற்சி சொல்லித்தரும் நிகழ்ச்சியை சன்னி லியோன் நடத்த இருப்பதால், அவருடைய ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

டிவியில் உடற்பயிற்சி சொல்லித்தரும் நிகழ்ச்சியை சன்னி லியோன் நடத்த இருப்பதால், அவருடைய ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
sunny leone, fitstop. mtv beats

டிவியில் உடற்பயிற்சி சொல்லித்தரும் நிகழ்ச்சியை சன்னி லியோன் நடத்த இருப்பதால், அவருடைய ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

Advertisment

பிரபல நீலப்பட நடிகையாக அறியப்பட்டவர் சன்னி லியோன். அவருக்கென ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கவந்த சன்னி லியோனைப் பார்க்க, வரலாறு காணாத அளவில் கூட்டம் திரண்டது எல்லோரும் அறிந்த விஷயம்.

ஜெய், ஸ்வாதி நடிப்பில் வெளியான ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ள சன்னி லியோன், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஒரு பாடலுக்கு நடனமாடி வருகிறார். இதனால், அவருடைய ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது.

இந்நிலையில், டிவியில் தினமும் உடற்பயிற்சி கற்றுத்தர இருக்கிறார் சன்னி லியோன். ‘எம்டிவி பீட்ஸ்’ என்ற சேனலில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. உடலுக்கு மட்டுமின்றி மனதுக்கும் இதமளிக்கும் வகையிலும் எளிய உடற்பயிற்சிகளை சன்னி கற்றுத்தரப் போகிறார். நவம்பர் 24ஆம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது.

Advertisment
Advertisements

‘பிட் ஸ்டாப்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில் இடம்பெறும் உடற்பயிற்சிகள், மிக எளிதாக அனைவரும் செய்யக்கூடிய வகையில் இருக்குமாம். இசையோடு கூடிய இந்த உடற்பயிற்சிகள், செய்பவரை வியர்க்க வைக்கும் என்கிறார்கள். தினமும் காலையில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது.

Tv Show

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: