Advertisment

Super Singer 10 Grand Finale Live: சூப்பர் சிங்கர் சீசன் 10 டைட்டிலை வென்றார் ஜான் ஜெரோம்!

விஜய் டிவியின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியான 'சூப்பர் சிங்கர் 10 இன் கிராண்ட் ஃபினாலே நிகழ்சியில், ஜான் ஜெரோம் டைட்டிலை வென்றார். முதல் ரன்னர் அப் ஆக ஜீவிதாவும் இரண்டாவது ரன்னர் அப் ஆக வைஷ்ணவியும் இடம்பிடித்தனர்.

author-image
Balaji E
New Update
super singer grand finale
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

விஜய் டிவியின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியான 'சூப்பர் சிங்கர் 10 இன் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி நடந்து வருகிறது. சூப்பர் சிங்கர் சீசன் 10 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 5 போட்டியாளர்கள் இந்த நிகழ்சியின் இறுதிப் போட்டிக்கு கடைசி கட்டத்திற்குள் நுழைந்தனர்..

Advertisment

ஜான் ஜெரோம், விக்னேஷ், ஜீவிதா, வைஷ்ணவி, ஸ்ரீநிதி ராமகிருஷ்ணன் ஆகியோர் 5 பாடகர்கள் இறுதிப் போட்டிக்கு வந்துள்ளனர். 

'சூப்பர் சிங்கர்' 10 சீசனுக்கான முக்கிய ஆடிஷன்கள் செப்டம்பர் 26, 2023 அன்று தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைபெற்றன. இந்த சீசன் டிசம்பர் 2023-ல் தொடங்கப்பட்டது, மெகா ஆடிஷன்களில் 25 போட்டியாளர்கள்-11 ஆண் மற்றும் 14 பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் நான்கு முக்கிய நடுவர்களால் தேர்வு செய்யப்பட்டனர்.

சூப்பர் சிங்கர் 10 சீசன் நிகழ்ச்சியை ம.கா.பா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே இருவரும் தொகுத்து வழங்கி வருகின்றனர். 

இந்த கிராண்ட் ஃபினாலே நிகழ்சியின் நடுவர் குழுவில் இசையமைப்பாளர் ஷன் ரோல்டன் மற்றும் அனுராதா ஸ்ரீராம், மனோ மற்றும் சுஜாதா மோகன் 3 பாடகர்கள் உள்பட 4 பேர் உள்ளனர். இவர்களில் சூப்பர் சிங்கர்' சீசன் 1 முதல் அனுராதா ஸ்ரீராம் நடுவராக இருந்து வருகிறார். 
சீசன் 4-ல் பாடகர்  மனோ மற்றும் சுஜாதா மோகன் நிரந்தரமாக நடுவர் குழுவில் இணைந்தனர். 'சூப்பர் சிங்கர்' நடுவர் குழுவில் புதிதாக இணைந்தவர் ஷான் ரோல்டன். 

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற சூப்பர் சிங்கர் 10 சீசன் கிராண்ட் ஃபினாலே பிற்பகல் நிகழ்ச்சி 3 மணிக்குத் தொடங்கி நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. இந்த சூப்பர் சிங்கர் கிராண்ட் ஃபினாலே பார்வையாளர்களுக்கு உற்சாகமான இசை நிகழ்ச்சியை வழங்குகிறது. 

சூப்பர் சிங்கர் 10 சீசன் கிராண்ட் ஃபினாலேவில் வெற்றி பெறுபவருக்கு 60 லட்சம் அடுக்குமாடி குடியிருப்பும், இரண்டாம் இடம் பிடிப்பவருக்கு 10 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படுகிறது.

மேலும், பார்வையாளர்களின் வாக்குகள் மற்றும் நடுவர்கள் அளித்த மதிப்பெண்கள் மூலம் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். 

'சூப்பர் சிங்கர்' கிராண்ட் ஃபைனாலே விஜய் தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணிக்குத் தொடங்கி இரவு 9:30 மணிக்கு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்லைன் ஸ்ட்ரீமிங்: டிஸ்னி+ ஹாட்ஸ்டார்: சந்தாதாரர்கள் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இணையதளம் மற்றும் ஆப்ஸில் நிகழ்ச்சியை நேரலையில் பார்க்கலாம். 

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் 10 கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியின் இறுதியில், ஜான் ஜெரோம் டைட்டிலை வென்றார். முதல் ரன்னர் அப் ஆக ஜீவிதாவும் இரண்டாவது ரன்னர் அப் ஆக வைஷ்ணவியும் இடம்பிடித்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv Super Singer
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment