Super Singer Winner Sridhar Sena Viral Video Tamil News : முறையாக சங்கீதம் பயின்றவர்கள் மட்டுமல்லாமல் எல்லா விதமான இசைப் பிரியர்களையும் ஒன்றிணைக்கும் மாபெரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். கர்னாடிக், கிராமியம் முதல் பாப், ஜாஸ் வரை எல்லா விதமான இணையும் சங்கமிக்கும் இந்த ரியாலிட்டி நிகழ்ச்சி, 10 ஆண்டுகளுக்கும் மேலாக இன்றும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் சமீபத்தில் சீனியர்களுக்கான 8-ம் சீசன் நிறைவடைந்துள்ளது. இந்த சீஸனின் வெற்றியாளராக ஸ்ரீதர் சேனா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கையில் வெற்றிக்கோப்பையுடன் சேனா பகிர்ந்துகொண்ட காணொளி இப்போது வைரல் ஹிட்.

நடுவர்களின் மதிப்பெண்கள் மட்டுமல்லாமல் மக்களின் வாக்குகள் அடிப்படையிலும் இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளர் தேர்வு உள்ளது. இது, இந்நிகழ்ச்சியின் வெற்றிக்குக் கூடுதல் பலம். அதன்படி, இந்த சீசன் ஆரம்பத்திலிருந்தே ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்த ஸ்ரீதர் வெற்றி பெற்றிருப்பது பலரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வெற்றியாளர் அறிவித்தபோது, அதே செட்டில் இருந்த குக் வித் கோமாளி புகழ் மணிமேகலை அங்கு நடப்பவற்றைக் காணொளியாய் பதிவு செய்து தன் வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும், ஷிவாங்கி, பாடகி கனிமொழி உள்ளிட்டவர்களும் தங்களின் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் பதிவு செய்தனர். குக் வித் கோமாளி புகழ் ரித்திகா, ஸ்ரீதர் சேனாவுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தன் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து தன்னுடைய வாழ்த்தையும் பதிவு செய்தார்.

இப்படி பொது மக்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டிருக்கையில், ஸ்ரீதர் சேனா தனக்கு ஆதரவளித்த அனைவர்க்கும் நன்றி தெரிவித்து காணொளி ஒன்றைப் பதிவு செய்திருக்கிறார். அந்த காணொளியில், “எல்லோருக்கும் பெரிய நன்றி. இன்றைக்கு இந்த வெற்றி எனக்குக் கிடைக்கக் காரணம் நீங்கதான். உலகம் முழுவதும் நிறையப் பேர் என்னை உங்க வீட்டுப் பையனா பார்க்குறீங்கன்னு நினைக்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. இந்த அன்பும் ஆதரவும் எப்போதும் இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்” என்றபடி தனக்கு வாக்களித்த மக்கள் அனைவர்க்கும் தன் வெற்றியை சமர்ப்பித்தார் ஸ்ரீதர் சேனா.
மேலும், இந்த சீஸனில் போட்டியாளராகப் பங்கேற்ற பரத், தனக்கு வந்த வாக்குகள் ஆச்சரியமாக உள்ளது என்றும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் காணொளி வாயிலாகப் பகிர்ந்துகொண்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil