சிங்கப்பூரில் நடைபெற்ற விஜய் டி.வி.யின் ‘சூப்பர் சிங்கர் வேர்ல்ட் டூர்’

சிங்கப்பூரில் நடைபெற்ற ‘சூப்பர் சிங்கர் வேர்ல்ட் டூர்’ நிகழ்ச்சி, விஜய் டி.வி.யில் வருகிற ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாக உள்ளது.

சிங்கப்பூரில் நடைபெற்ற ‘சூப்பர் சிங்கர் வேர்ல்ட் டூர்’ நிகழ்ச்சி, விஜய் டி.வி.யில் வருகிற ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாக உள்ளது.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
super singer world tour

சிங்கப்பூரில் நடைபெற்ற ‘சூப்பர் சிங்கர் வேர்ல்ட் டூர்’ நிகழ்ச்சி, விஜய் டி.வி.யில் வருகிற ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாக உள்ளது.

Advertisment

விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி ‘சூப்பர் சிங்கர்’. திறமையும், தகுதியும் கொண்ட சிறந்த பாடகர்களைத் தேர்ந்தெடுக்கும் இந்த நிகழ்ச்சி மூலம் அடையாளம் காணப்பட்டு சினிமாவில் பின்னணிப் பாடகர்களாக ஆனவர்கள் பலர். சீனியர், ஜூனியர் என இரண்டு பிரிவுகளில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

‘சூப்பர் சிங்கர் வேர்ல்ட் டூர்’ நிகழ்ச்சி, சிங்கப்பூரில் உள்ள சன்டெக் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது. இதில், ‘சூப்பர் சிங்கர் ஜுனியர் 5’ இறுதிப் போட்டியாளர்களான பவின் வினோத், மோனிகா, ப்ரீத்திகா, கெளரி மற்றும் தனுஷ் ஆகியோர் பங்கேற்று பல்வேறு பாடல்களைப் பாடினர். அத்துடன், ‘சூப்பர் சிங்கர் ஜூனியர்’ நிகழ்ச்சியின் நடுவர்களான பின்னணிப் பாடகர்கள் சித்ரா மற்றும் மால்குடி சுபா இருவரும் தங்களுடைய குரல் வளத்தால் பார்வையாளர்களைக் கட்டிப் போட்டனர்.

மேலும், ‘சூப்பர் சிங்கர்’ நட்சத்திரங்களான நிகில் மேத்யூ மற்றும் திவாகர் இருவரும் அருமையான பாடல்களைப் பாடினர். சின்ன வயதிலேயே தேசிய விருது பெற்ற உத்ரா உன்னிகிருஷ்ணன், தன் தந்தையான பிரபல பின்னணிப் பாடகர் உன்னிகிருஷ்ணனுடன் சேர்ந்து பாடினார். கானா பாடல்களுக்குப் பெயர்பெற்ற பின்னணிப் பாடகர் அந்தோணிதாசனும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாடியுள்ளார்.

Advertisment
Advertisements

வெறும் பாடல்களை மட்டுமே பாடாமல், ‘கலக்கப்போவது யாரு’ நட்சத்திரங்கள் நிஷா, தீனா மற்றும் குரேஷி பங்குபெற்ற வயிறு குலுங்க சிரிக்கவைக்கும் நகைச்சுவை நிகழ்ச்சியும் இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியை ‘நீயா நானா’ கோபிநாத், ரியோ இருவரும் தொகுத்து வழங்கினர். இப்படி பல சிறப்புகள் கொண்ட இந்த நிகழ்ச்சி, வருகிற ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது.

Singer Chitra Vijay Tv

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: