/indian-express-tamil/media/media_files/2025/11/04/kamal-2025-11-04-14-13-31.jpg)
பல தசாப்தங்களாக திரையுலகில் கோலோச்சி ரசிகர்களை ரசிக்க வைத்து வருபவர் கமல்ஹாசன். தன் நடிப்பு திறமையால் உலக நாயகன் என்ற பட்டம் பெற்ற இவர். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் ரசித்து... ரசித்து நடிப்பார். ’களத்தூர் கண்ணம்மா’ என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா பயணத்தை தொடங்கிய கமல்ஹாசன் ’அரங்கேற்றம்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
தொடர்ந்து, 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த கமல்ஹாசன் தான் நடிக்கும் கதாபாத்திரங்களுக்காக அவ்வளவு மெணக்கிடுவார். ‘தசாவதாரம்’ திரைப்படத்தில் 10 கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை ஆச்சயப்பட வைத்தார். இன்னும் பல இயக்குநர்களும் கமல்ஹாசன் வைத்து ஒரு படமாவது இயக்க வேண்டும் என்ற ஆசையில் உள்ளனர். அன்று முதல் இன்று வரை உச்ச நட்சத்திர பட்டியலில் சரிவின்றி தலைதூக்கி நிற்பவர் கமல்ஹாசன் தான்.
கமல்ஹாசனை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்று பல நடிகர்கள் ஆசைப்பட்டது உண்டு. அந்த வரிசையில் கமலை எப்படியாவது தொட்டு விட வேண்டும் என்று நினைத்தவர் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான். கடந்த 2000-ஆம் ஆண்டு நடிகர் கமல்ஹாசன் இயக்கி, தயாரித்து, நடித்த ’ஹே ராம்’ படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான். கமல்ஹாசன் மீது அதீத பிரியம் வைத்திருந்த ஷாருக்கான் இந்த படத்தில் வாய்ப்பு வந்ததும் எப்படியாவது கமலை தொட்டு பார்த்துவிடலாம் என்று சந்தோஷப்பட்டார்.
This video never gets old#HBDShahrukh#KamalHaasan#Vinvelinayaganpic.twitter.com/1oOtShYZm5
— Nammavar (@nammavar11) November 2, 2025
‘ஹே ராம்’ பட வேலைகள் நடந்தபோது திட்டமிட்டதை விட அதிக செலவாகிவிட்டது. இதனால் ஷாருக்கானுக்கு சம்பளம் கொடுக்க பணம் இல்லை. அப்போது கமல்ஹாசன் ஷாருக்கான் உங்களுக்கு சம்பளம் தர என்னிடம் பணம் இல்லையே என்று கூறியிருக்கிறார். அதற்கு அவரோ, அதை விடுங்க என்று சொல்லி கமலை அசர வைத்துவிட்டார். அவரின் அந்த மனதிற்காக என் கைக்கடிகாரத்தை தான் சம்பளமாக கொடுத்தேன் என்று பேட்டி ஒன்றில் கமல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
'ஹே ராம்’ படத்தின் இந்தி ரைட்ஸ் ஷாருக்கானிடம் தான் இருக்கிறது. அது தான் சரியான விஷயம் என்றார் கமல்ஹாசன். இந்நிலையில் விண்வெளி நாயகனை தொட ஆசைப்பட்டதாக ஷாருக்கான் தெரிவித்த பழைய வீடியோவை கமல் ரசிகர்கள் தற்போது சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us