Advertisment

திருப்பதி தரிசனத்தை தொடர்ந்து தர்கா விசிட்... ரஹ்மானுடன் சென்று ரஜினி வழிபாடு!

காலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்த ரஜினிகாந்த், அதைத்தொடர்ந்து ஏ.ஆர். ரஹ்மானுடன் கடப்பாவில் உள்ள அமீன் தர்காவுக்குச் சென்று வழிபாடு செய்தார்.

author-image
WebDesk
New Update
திருப்பதி தரிசனத்தை தொடர்ந்து தர்கா விசிட்... ரஹ்மானுடன் சென்று ரஜினி வழிபாடு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று (வியாழக்கிழமை) திருப்பதி ஏழுமலையான் கோயில் மற்றும் அமீன் பீர் தர்காவிற்கு சென்று வழிபாடு செய்தார். ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யாவுடன் இன்று அதிகாலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற ‘சுப்ரபாத சேவையில்’ பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Advertisment

ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவுடன் நேற்று (புதன்கிழமை) இரவு திருமலைக்கு வந்தனர். திருமலையில் உள்ள டி.எஸ்.ஆர் விருந்தினர் மாளிகையில் இரவு தங்கினர். அதைத்தொடர்ந்து இன்று அதிகாலை ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கோயிலுக்கு வந்த ரஜினியை தேவசம் போர்டு செயல் அதிகாரி தர்மா ரெட்டி வரவேற்றார்.

சாமி தரிசனம் செய்தப் பின் ரஜினிக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டு பண்டிதர்கள் வேத ஆசீர்வாதம் செய்தனர். ரஜினிகாந்த் தாம் வழக்கமாக அணியும் குர்தா உடையில் காணப்பட்டார். தொடர்ந்து ரஜினிகாந்த் மற்றம் ஐஸ்வர்யா இருவரும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுடன் ஆந்திராவின் கடப்பாவில் உள்ள புகழ்பெற்ற அமீன் பீர் தர்கா அல்லது பெத்தா தர்காவுக்குச் சென்றனர். அங்கு அவர்களுக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

,

ரஜினிகாந்த் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் இந்த படத்தின் முன்னோட்டம் வெளியாகி படத்தின் எதிர்பார்ப்பை கூட்டியது. இப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிட்டதிட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்த் ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடிக்கின்றனர்.

,

இப்படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் வில்லனாக நடிக்கிறார். மேலும் வசந்தா ரவி, விநாயகன், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பேட்ட படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்த அனிருத் மீண்டும் இப்படத்திலும் இசையமைக்கிறார்.

publive-image

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment