Advertisment

நிவின் பாலி ஷூட்டிங்கில் சூர்யா - ஜோதிகா

நிவின் பாலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு, சூர்யா - ஜோதிகா இருவரும் ஜோடியாக வி்ஸிட் அடித்துள்ளனர்.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
நிவின் பாலி ஷூட்டிங்கில் சூர்யா - ஜோதிகா

நிவின் பாலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு, சூர்யா - ஜோதிகா இருவரும் ஜோடியாக வி்ஸிட் அடித்துள்ளனர்.

Advertisment

திருமணத்துக்குப் பின் ஜோதிகா நடிப்பில் வெளியான முதல் படம் ‘36 வயதினிலே’. ரோஷன் ஆண்ட்ரூஸ் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். இவர் மலையாளத்தில் இயக்கிய ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ படத்தின் ரீமேக்தான் இது. ஜோதிகாவுக்கு நல்ல ரீஎன்ட்ரி படமாக இது அமைந்தது.

‘36 வயதினிலே’ படத்தைத் தொடர்ந்து, ‘ஸ்கூல் பஸ்’ என்ற மலையாளப் படத்தை இயக்கினார் ரோஷன் ஆண்ட்ரூஸ். தற்போது, ‘காயம்குளம் கொச்சுண்ணி’ என்ற படத்தை இயக்கி வருகிறார். 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒருவரின் நிஜக்கதை இது. நெடுஞ்சாலையில் செல்பவர்களிடம் வழிப்பறி செய்து, இல்லாதவர்களிடம் கொடுப்பதுதான் அவர் வழக்கம்.

‘காயம்குளம்’ கொச்சுண்ணி படத்தில் நிவின் பாலி ஹீரோவாக நடிக்கிறார். கன்னடத்தைச் சேர்ந்த பிரியங்கா, ஹீரோயினாக நடிக்கிறார். இவருக்கு இதுதான் முதல் மலையாளப் படம். சரத் குமார், இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்தப் படத்தின் ஷூட்டிங், தற்போது மங்களூரில் நடைபெற்று வருகிறது. இந்த ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சூர்யா - ஜோதிகா இருவரும் ஜோடியாக விஸிட் அடித்துள்ளனர். ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்குவதால், நட்பு அடிப்படையில் அவர்கள் விஸிட் அடித்ததாக கூறப்படுகிறது. சூர்யா - ஜோதிகா வருவதை முன்னிட்டு, ஷூட்டிங் ஸ்பாட் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அவர்களுக்காக ஸ்பெஷல் கேக் வரவழைக்கப்பட, இருவரும் சேர்ந்து அதை வெட்டினர்.

Jyothika Actor Suriya Nivin Pauly
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment