சூர்யாவின் வீடியோ பொங்கல் வாழ்த்து

தன்னுடைய ரசிகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் சூர்யா.

தன்னுடைய ரசிகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் சூர்யா. அவருடன் இயக்குநர் விக்னேஷ் சிவனும் தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. சூர்யாவின் 35வது படமான இதை, விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்க, கார்த்திக், செந்தில், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்தப் படம், கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 12) ரிலீஸாகியுள்ளது.

‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால், சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். எனவே, தன்னுடைய ரசிகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ட்விட்டரில் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் சூர்யா. வீடியோவாக அவர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவருடன் இயக்குநர் விக்னேஷ் சிவனும் சேர்ந்து தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

×Close
×Close