Suriya’s Best Love Songs: காதல் பாடலானாலும், தனிமையில் மனம் உருகி துக்கத்தை வெளிப்படுத்தும் பாடலானாலும் சரி ரசிகர்கள் மத்தியில் சூர்யாவின் பாடல்களுக்கு மவுசே தனி. படத்தில் சூர்யாவின் பிரெசன்ஸை மட்டும் ரசிகர்கள் என்ஜாய் செய்வதில்லை. அவருடைய பாடல்களையும் தான்! 10 வருடத்திற்கு முன்பு வெளியான சூர்யாவின் பாடல், இப்போதும் ரசிகர்களை முணுமுணுக்கச் செய்கிறது. குறிப்பாக இவருடைய பாடல்களுடன் 90’ஸ் கிட்ஸ்கள் எளிதில் கனெக்டாக முடியும். அந்த வகையில் 90’ஸ் கிட்ஸ்களுக்கு ஃபேவரிட்டான சூர்யா பாடல்களை இங்கே குறிப்பிடுகிறோம்…
முன்பே வா
எந்தவொரு காதலர்கலுக்கும் பிடித்துப் போகும் பாடல். இந்தப் பாடல் இன்றும் நமது பிளே லிஸ்ட்களை ஆட்சி செய்துக் கொண்டிருக்கிறது. அனைவரையும் தொடர்புபடுத்தும் உணர்வுடன் கூடிய நல்ல காதல் பாடல். ஸ்டன்னிங்கான காட்சிகள், ஏ.ஆர். ரஹ்மானின் மேஜிக், மற்றும் சூர்யாவின் அழகான காதல் எக்ஸ்பிரஷன்ஸ் அனைத்தும் ரசிகர்களின் மனதை விட்டும் என்றும் அகலாதவை.
நெஞ்சுக்குள் பெய்திடும்
எளிதில் நம் இதயங்களை வென்ற மற்றொரு பாடல் இது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், எளிமையாக நம் இதயங்களைக் கவர்ந்தது. பாடலைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும், காதலிக்கும் அழகை கேமராவில் அவ்வளவு சுலபமாக சூர்யா காட்டியிருப்பதாக தோன்றும். அவர் மேக்னா மீது பார்வையை வீசும் தருணம், சூர்யாவின் முகம் ஒளிரும். இந்த ஒரு பாடல், வாரணம் ஆயிரம் படத்தைப் பார்க்க பெரும் தூண்டுதலாய் இருந்தது என்றால், அது மிகையில்லை.
என்னை கொஞ்சம் மாற்றி
படம் புகழ்பெற்றதாக இருந்தால், பாடல்களும் காலப்போக்கில் அழியாதவைகளாக இருக்கும். இந்தத் திரைப்படம் சூர்யா-ஜோதிகா ஜோடிக்கு பெரும் ரசிகர்களைப் பெற்று தந்ததோடு, அவர்களை திரையில் மிகவும் விரும்பப்பட்ட ஜோடிகளில் ஒருவராகவும் மாற்றியது. அன்பு என்ற போலீஸ் அதிகாரிக்கு, ரசிகர்கள் மத்தியில் பெரும் அன்பை பெற்றுத் தந்தது.
பாக்காத என்ன பாக்காத
இந்த பாடல் இது இடம்பெற்றிருந்த திரைப்படத்தை விட பிரபலமானது. மெல்லிய இசையில், சூர்யாவும் த்ரிஷாவும், தங்களது அழகான உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள். சூர்யாவின் உடலமைப்பு, எக்ஸ்பிரஷன்ஸ் மற்றும் நடிப்பு அனைத்தும் பாடலில் டாப் க்ளாஸ்! இது பல இளைஞர்களுக்கு இன்றும் ஃபேவரிட் பாடல்.
விழி மூடி யோசித்தால்
மெல்லிசை மற்றும் புதிய காட்சிகள் மட்டும் இந்த பாடலை வெற்றிப் பாடலாக மாற்றவில்லை. சூர்யா – தமன்னா ஜோடியின் வேதியியல், சூரியாவின் குறும்புத்தனம், அவரின் சார்மிங் இவை அனைத்தும் பாடல் மீதான விருப்பத்தை அதிகரித்தன. இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது, பாடல் எல்லா காலத்திலும் மிகவும் விரும்பப்படும் காதல் பாடல்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
சுற்றும் விழி
கஜினி பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது. அதற்கு படத்தின் பாடல்கள் மிகப்பெரிய பங்கு வகித்தன. இந்த பாடல், ஓவ்வொருவரின் மனநிலைக்கு ஏற்றவாரு லைக்ஸை குவித்தது. காதலில் இருப்பதை சூரியாவின் பிரெசன்ஸ் மற்றும் நடிப்பு அட்டகாசமாக வெளிப்படுத்தியது. நம்பிக்கை, சிறிய விஷயங்களில் மகிழ்ச்சியைக் கண்டறிதல் மற்றும் ஒரு அற்புதமான ரகசியத்தை மறைத்து வைக்கும் உற்சாகம்… இவையனைத்தையும் சூர்யாவின் கண்கள் நம்மிடம் விவரித்தன.
முன் பனியா
இது வெளியான காலத்தில் இருந்து நீண்ட காலமாக ரசிகர்களின் ஃபேவரிட் லிஸ்டில் இருக்கிறது. சூர்யா மற்றும் லைலா ஆகியோரைக் கொண்ட இந்த பாடல், காதலில் விழுந்த ஆரம்ப நாட்களை அழகாகக் காட்டியது. திரைப்படத்தில் சூரியாவின் கதாபாத்திரம் க்ரே கலரில் இருக்கும். கடந்த காலத்தை மீறி, காதலில் விழுந்ததில் நாம் மகிழ்ச்சியடைகின்ற ஹீரோவாக இருந்தார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:Suriya best songs for every 90s kid tamil cinema news