Advertisment

சூர்யா பிறந்தநாள்; பேனர் வைக்கும்போது மின்சாரம் தாக்கி ரசிகர்கள் மரணம்

சூர்யா பிறந்தநாளுக்காக பேனர் வைக்கும்போது மின்சாரம் தாக்கி ரசிகர்கள் மரணம்; ஆந்திராவில் சோகம்

author-image
WebDesk
New Update
suriya

சூர்யா பிறந்தநாளுக்காக பேனர் வைக்கும்போது மின்சாரம் தாக்கி ரசிகர்கள் மரணம்; ஆந்திராவில் சோகம்

நடிகர் சூர்யாவின் பிறந்தநாளுக்காக பேனர் வைக்கும்போது மின்சாரம் தாக்கி 2 ரசிகர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

நடிகர் சூர்யாவின் 48வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சூர்யாவின் பிறந்தநாளுக்காக ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக அவரது நடிப்பில் உருவாகி வரும் கங்குவா படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது. இதனை ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். மேலும், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா படத்தின் முக்கிய அப்டேட்டும் இன்று வெளியாக உள்ளது. சூர்யாவின் பிறந்தநாள் இவ்வாறு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ஆந்திராவில் ஒரு சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதையும் படியுங்கள்: நடிகை ரேகா அவரின் பெண் செயலாளருடன் லிவ்-இன் உறவில் இருந்தாரா? மறுக்கும் பயோகிராபி ஆசிரியர்

ஆந்திர மாநிலத்தில் உள்ள மோபுரிவாரிபாலம் என்கிற கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரும், பாபட்லா மாவட்டத்தைச் சேர்ந்த லே பங்களூரைச் சேர்ந்த போளூரி சாய் என்பவரும் தனது நண்பர்களுடன் சூர்யாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக தயாராகி வந்தனர். இதையொட்டி நேற்று இரவு நரசராவ்பேட்டையில் சூர்யா பிறந்தநாள் பேனரை வைக்க அவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது அந்த பேனரை கட்டிக் கொண்டிருக்கும் போது பிளக்ஸ் பேனரில் உள்ள இரும்பு பிரேமில் மின்கம்பி உரசியதில் இருவருமே மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் இறந்த இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நரசராவ்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த இருவருமே கல்லூரி மாணவர்கள். இருவரும் ஒன்றாக கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்த மற்றொருவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சூர்யா பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக பேனர் கட்டிய போது ரசிகர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Actor Suriya Andhra Pradesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment