‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் தெலுங்கு டீஸர் நாளை ரிலீஸாகிறது!

தெலுங்கில், யுவி க்ரியேஷன்ஸ் என்ற நிறுவனம் வெளியிடுகிறது. தெலுங்குப் பதிப்பின் டீஸர், நாளை ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

suriya keerthy suresh

சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் தெலுங்கு டீஸர் நாளை ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகிவரும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இந்தப் படத்தில், சூர்யா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அத்துடன், கார்த்திக், செந்தில், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, கலையரசன், சத்யன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை, ஸ்டுடியோ க்ரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழைப் போலவே தெலுங்கிலும் சூர்யாவுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருப்பதால், தமிழில் வெளியாகும் அதே தினத்தன்று தெலுங்கிலும் ரிலீஸாகிறது. அங்கு, ‘கேங்’ என்ற பெயரில் இந்தப் படம் ரிலீஸாக உள்ளது. தெலுங்கில், யுவி க்ரியேஷன்ஸ் என்ற நிறுவனம் வெளியிடுகிறது. தெலுங்குப் பதிப்பின் டீஸர், நாளை ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில், கடந்த நவம்பர் 30ஆம் தேதி டீஸர் ரிலீஸானது. அந்த டீஸரை இதுவரை 84 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Suriyas gang teaser release tomorrow

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com