scorecardresearch

சுருதி, நாடியா, சிபி, அபிநய் என்ட்ரி… கொண்டாட்டத்தில் பிக் பாஸ் வீடு!

Surudhi Nadia Ciby Abinai Re entry in Bigg Boss 5 Tamil Finale week இது என்ன ஆர்டர் என்பதுகூட தெரியவில்லை. ஒவ்வொருவரும் நிற்கும் ஆர்டரிலும் மாலையைப் போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. என்னவாக இருக்கும்?

Surudhi Nadia Ciby Abinai Re entry in Bigg Boss 5 Tamil Finale week
Surudhi Nadia Ciby Abinai Re entry in Bigg Boss 5 Tamil Finale week

Surudhi Nadia Ciby Abinai Re entry in Bigg Boss 5 Tamil Finale week : ஒருவழியாக ப்ரோமோவில் வரும் கன்டென்ட் எதையும் நீக்காமல், அப்படியே இந்த வார எபிசோடுகளில் ஒளிபரப்புகின்றனர். மேலும், சத்தமில்லாமல் சாந்தமாகவும் அன்பு நிறைந்தும் காணப்படுகிறது. எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பது போல இதுவரை எந்த சம்பவங்களும் நடக்கவில்லை என்றாலும், முன்னாள் போட்டியாளர்களின் வருகை வீட்டை மேலும் அழகாக்கியது.

காலையிலேயே வீட்டை விட்டு வெளியேறிய சுருதி மற்றும் நாடியா சாங் ஆரவாரத்தோடு மீண்டும் வீட்டிற்குள் வர, வீட்டிலிருந்த போட்டியாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உறைந்தனர். கொண்டாட்ட வாரம் என்று தெரிந்த பிறகு, எந்த கன்டென்ட்டும் இருக்காது என்று எதிர்பார்த்தால், அமீர் இருக்கும் வரை சர்ச்சைகள் இருக்கும் என்பதுபோல அமீரை சுற்றி ஏராளமான விஷயங்கள் மெளனமாக நடைபெற்றது.

வந்த இரண்டு வாரங்களிலேயே வீட்டை விட்டு வெளியேறிய நாடியா சாங், நேற்றுதான் அதிகம் பேசி கேட்டோம். இறுதிவரை பயணிக்கக்கூடிய வலுவான போட்டியாளர் நாடியா என்று அண்ணாச்சி ஒருமுறையா கூறியிருக்கிறார். இருந்தும் அவர் வெளியேறியது மக்களிடத்தில் எந்த அளவிற்கும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும், அவரைப் பற்றிப் பல விஷயங்கள் நமக்குத் தெரியவில்லை என்பதும் நிதர்சனம்.

தன்னுடைய நெருங்கிய தோழியான பாவனியின் பெயரை ரிப்பேர் செய்துகொண்டிருக்கிறார் என்கிற கடுப்பில் கொந்தளித்துக்கொண்டிருந்த சுருதி, ஆரம்பத்தில் அமீரை கண்டுக்கவேயில்லை. பிறகு போகப்போகப் பேசத் தொடங்கினார் அமீர். அது வளர்ந்து, இருவரையும் டீஸ் செய்கிற அளவிற்கு நீண்டது. ஆனாலும், அமீருடன் பேசும்போது ஒருவித தயக்கத்தோடு பேசியது நன்கு தெரிந்தது.

அடுத்ததாக, ஃபைனலிஸ்ட் ஐந்து பேருக்கும் சுருதி மற்றும் நாடியா சாங் இருவரும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். ஆனால், மாலை அணிவித்த வரிசைதான் சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக இருந்தது. முதலில் மாலையை எடுத்த சுருதி, தன்னுடைய தோழி பாவனிக்கு முதலில் அணிவிப்பர் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேராக நிரூப்பிற்கு சென்று அணிவித்தார். அடுத்ததாக, அமீர் மற்றும் பாவனிக்கு மாலையை அணிவித்தார். இது என்ன ஆர்டர் என்பதுகூட தெரியவில்லை. ஒவ்வொருவரும் நிற்கும் ஆர்டரிலும் மாலையைப் போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. என்னவாக இருக்கும்?

ராஜு மற்றும் ப்ரியங்காவிற்கு இறுதியாக நாடியா சாங் மாலையிட்டார். இது என்ன ஆரடர் என்பதுதான் தற்போது இணையத்தில் பரபரப்பாகப் பேசிவருகின்றனர். நம்மைத் தெளிவாகக் குழப்பியிருக்கின்றனர் என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது. எது எப்படியோ… விஜய் டிவி ப்ராடக்ட்தான் வெற்றியாளர். யார் வந்தால் என்ன? இந்த மைண்ட் செட்டிற்குதான் மக்கள் அனைவரும் வந்திருக்கின்றனர்.

இவர்களை அடுத்து, சிபி மற்றும் அபிநய் வீட்டிற்குள் வித்தியாசமாக என்ட்ரி கொடுக்க, வீடே வேற லெவல் கொண்டாட்டத்தில் மூழ்கியது. எப்போதும் போல சில டாஸ்க்குகளை கொடுத்து, பாடலோடு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் ராகத்தில் திண்டாடினார்கள். இன்றைக்கும் வீட்டை விட்டு வெளியேறிய சிலர் வீட்டிற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களில் ராஜு ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருப்பது அண்ணாச்சியைத்தான். பிரியங்கா, அபிஷேக்கின் வருகைக்காகக் காத்திருக்கிறார். பார்ப்போம்.. என்னவெல்லாம் மாற்றங்கள் வரப்போகிறது என்று!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Surudhi nadia ciby abinai re entry in bigg boss 5 tamil finale week