‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தை ரீரிலீஸ் செய்யும் சுசீந்திரன்

அடுத்த மாதம் 15ஆம் தேதி மறுபடியும் இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய பிளான் பண்றோம். இந்தப் படத்தைப் பார்த்த அனைவருக்கும் நன்றி.

கடந்த வாரம் வெளியான ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தை, அடுத்த மாதம் 15ஆம் தேதி மறுபடியும் ரிலீஸ் செய்யப் போவதாக இயக்குநர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.

சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸான படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’. சந்தீப் கிஷண், விக்ராந்த் இருவரும் ஹீரோக்களாக நடித்திருந்தனர். மெஹ்ரீன், இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். துளசி, சூரி, அப்புக்குட்டி, ஹரிஷ் உத்தமன் ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்தப் படம் பெரும்பாலானோருக்குப் பிடிக்கவில்லை. இதனால் வசூல் குறையவே, படத்தில் இருந்து 20 நிமிட காட்சிகளை நீக்கியுள்ளார் சுசீந்திரன். குறிப்பாக, கதைக்குத் தேவையில்லாத ஹீரோயின் மெஹ்ரீன் சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கியுள்ளார். மேலும், இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ் காட்சியிலும் மாற்றம் செய்துள்ளார். திங்கள்கிழமை முதல் மாற்றம் செய்யப்பட்ட படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

“ஹீரோயின் மெஹ்ரீன் சம்பந்தப்பட்ட காட்சிகளை 15 நாட்கள் படமாக்கினோம். சூழ்நிலை காரணமாக படத்தில் இருந்து அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கியுள்ளோம். இதற்காக நான் அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார் சுசீந்திரன்.

‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படம், ‘கேர் ஆஃப் சூர்யா’ என்ற பெயரில் தெலுங்கிலும் ரிலீஸாகியுள்ளது. அதிலும் மேற்சொன்னவற்றை நீக்கியுள்ளார் சுசீந்திரன். இப்படி செய்தாலாவது படம் ஓடும் என்று நம்பினார் சுசீந்திரன். ஆனால், அப்படியும் ஓடாததால், படத்தை ரீரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளார்.

இன்று ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்தப் படத்தை ரீரிலீஸ் பிளான் பண்றோம். அடுத்த மாதம் 15ஆம் தேதி மறுபடியும் இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய பிளான் பண்றோம். இந்தப் படத்தைப் பார்த்த அனைவருக்கும் நன்றி.

https://twitter.com/twitter/statuses/931030415049080832

இந்தப் படத்தைப் பார்த்து உண்மையான விமர்சனம் பண்ணவங்களுக்கும், உள்நோக்கத்தோடு விமர்சனம் பண்ணவங்களுக்கும் நன்றி. சில தவிர்க்க முடியாத காரணங்களால் நாளை முதல் எந்தத் திரையரங்கிலும் இந்தப் படம் ஓடாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். அடுத்த மாதம் 15ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாகும், நன்றி” எனத் தெரிவித்துள்ளார் சுசீந்திரன்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Suseenthiran plan to re release nenjil thunivirundhal movie on december 15th

Next Story
வரி செலுத்த மறுப்பு : கைதாகிறாரா அமலா பால்?ponniyin Selvan: Amala Paul
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com