சுசீந்திரன் இயக்கத்தில் சந்தானம்?

சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் சந்தானம் என்றொரு தகவல் கிடைத்துள்ளது. சுசீந்திரன் தற்போது ‘ஏஞ்சலினா’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

santhanam

சுசீந்திரன் அடுத்ததாக இயக்கவுள்ள படத்தில், ஹீரோவாக சந்தானம் நடிக்கப் போகிறார் எனத் தகவல் கிடைத்துள்ளது.

சந்தானம் நடிப்பில் கடந்த மாதம் ‘சக்க போடு போடு ராஜா’ படம் ரிலீஸானது. அதனைத் தொடர்ந்து ‘சர்வர் சுந்தரம்’, ‘ஓடி ஓடி உழைக்கணும்’, ‘மன்னவன் வந்தானடி’ என 3 படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார் சந்தானம். இந்த 3 படங்களின் ஷூட்டிங்கும் முடிந்துவிட்டது.

அடுத்ததாக, சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் சந்தானம் என்றொரு தகவல் கிடைத்துள்ளது. சுசீந்திரன் தற்போது ‘ஏஞ்சலினா’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நடிப்பவர்கள் பெரும்பாலானவர்கள் புதுமுகங்கள்.

அத்துடன், ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கும் ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ படத்தில் நடிக்கிறார் சுசீந்திரன். இந்நிலையில் தான் இந்தத் தகவல் கிடைத்துள்ளது. இதைப்பற்றி இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Suseenthiran will direct santhanam

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com