’புடவைன்னா எனக்கு உயிர்’ - வீடியோ வெளியிட்ட பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென்!
Sushmita Sen Relationship with Rohman Shawl: தனது காதலன் ரோஹ்மன் ஷாலுடனான ரிலேஷன்ஷிப்பின் மூலம் பல மீடியாக்களில் தலைப்புச் செய்தியாக வலம் வருகிறார் சுஷ்மிதா.
Sushmita Sen: புடவை மீதான இந்திய பெண்களின் காதல் எங்கும், எப்போதும் மறைக்கப்பட்டதில்லை. வித விதமான நிறங்களில் அழகான புடவையும், அதர்கு ஏற்றார் போல் அலங்காரமும் செய்துக் கொள்ள யாருக்குத் தான் ஆசை இருக்காது.. இதில் பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென்னும் வேறுபட்டவர் அல்ல.
சமூக வலைதளங்களில் தினமும் தனது அன்றாட விஷயங்களைப் பற்றி படம் மற்றும் வீடியோவை தனது ரசிகர்களை மகிழ்விக்கும் பொருட்டு அவர் பதிவிடுவார். அந்த வகையில் புடவை மீதான தன் காதலை வெளிப்படுத்தும் விதமாக ட்விட்டரில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார் சுஷ்.
Advertisment
Advertisements
பிக்பாஸ் இல்லத்தில் எனக்கு நடந்த கொடுமை: ஜாங்கிரி மதுமிதா பேட்டி
பிங்க் மற்றும் மஞ்சள் நிற பட்டுப்புடவை, லூஸ் ஹேர் என ஸ்டைலாக நடந்து பின்னர், முந்தானையை இடது கையில் பிடித்தவாறு சுற்றுகிறார். இதற்கிடையில், தனது காதலன் ரோஹ்மன் ஷாலுடனான ரிலேஷன்ஷிப்பின் மூலம் பல மீடியாக்களில் தலைப்புச் செய்தியாக வலம் வருகிறார் சுஷ்மிதா. அவர்களின் காதல் எவ்வளவு ஆழம் என்பதற்கு சுஷ்மிதாவின் இன்ஸ்டாகிராம் பக்கமே சாட்சி.
'பிவி நம்பர் 1', 'டூ நாட் டிஸ்டர்ப்', 'மெயின் ஹூன் நா', 'மைனே பியார் கியுன் கியா', 'தும்கோ நா பூல் பாயங்கே' மற்றும் பல படங்களில் நடித்துள்ள சுஷ்மிதா சென், இறுதியாக 2015-ஆம் ஆண்டு பெங்காலி படமான 'நிர்பாக்' படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.