ஜூன் 24 2016-ல் நுங்கம்பாக்கத்தில், பெண் சாஃப்ட்வேர் இன்ஜினியர் சுவாதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. அந்த வழக்கு தொடர்பாக ராம்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். ஆனால், சிறையில் இருந்த ராம்குமார், 2016 செப்டம்பர் மாதம் வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தெரிவித்தது.
தற்போது, இந்த வழக்கு தொடர்பான விசாரணையை அடிப்படையாக வைத்து, ‘சுவாதி கொலை வழக்கு’ என்ற பெயரிலேயே திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அஜ்மல் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள இப்படத்தை எஸ்டி ரமேஷ் செல்வன் இயக்கியுள்ளார். இவர் உளவுத்துறை, ஜனனம், வஜ்ரம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.