படத்தை போல சொந்த திருமணத்திலும் ட்விஸ்ட் வைத்த நடிகை!

நடிக்காமல் சும்மா இருந்தால் பைத்தியம் பிடித்துவிடும்

பிரபல நடிகை சுவாதிக்கு வரும்  30 ஆம் தேதி திருமணம் நடைப்பெறுகிறது. காதல் கணவர் விகாஷை மணக்கிறார்.

நடிகை சுவாதி திருமணம் :

தெலுங்கில் பிரபல டிவி தொலைக்காட்சியில் ஆன்ங்கராக இருந்த நடிகை ஸ்வாதி தமிழில் சுப்பரமணியபுரம் படத்தின் மூலம கதாநாயகியாக அறிமுகமானர். முதல் படத்தில் துரு துரு கண்கள், எத்து பல் என்று ரசிகர்களின் மனதில் இவரின் முகம் ஆழமாக பதிந்து விட்டது.

அதன் பின்பு, போராளி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி, யட்சன், யாக்கை  உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை தன் வசப்படுத்தினார். குறிப்பாக வடகறி படத்தில் இவரின் நடிப்பை இளைஞர்கள் பலர் ரசித்தனர்.

இந்நிலையில்  ஸ்வாதிக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கினர். இதனால்  ஹதராபாத் பக்கம் சென்ற அவர், ஒரு சில படங்களில் நடித்தார். இந்நிலையில்   ஸ்வாதிக்கு மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் விமானியாக பணியாற்றும் விகாஸ் என்பவருக்கும் காதல் மலர்ந்தது.

இருவரும் ஒருவரையொருவர் புரிந்துக் கொண்டு தற்போது திருமன பந்தத்தில் இணைந்துள்ளனர். இவர்களின் திருமணத்திற்கு இரு வீட்டாரும் பச்சைக் கொடி காட்டியுள்ளனர்.  இந்நிலையில்  வரும் 30ம் தேதி ஸ்வாதிக்கும், விகாஸுக்கும் திருமணம் நடைபெறுகிறது.

திருமணத்திற்கு குடும்பத்தார், நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து  கேரள மாநிலம் கொச்சியில் பிரமாண்ட வரவேற்பு நடக்க உள்ளது.விகாஸ் இந்தோனேசியாவில் உள்ள ஜகார்தாவில் வசிக்கிறார். திருமணத்திற்கு பிறகு ஸ்வாதி இந்தோனேசியாவில் செட்டில் ஆகிவிடுவார் என்று கூறப்படுகிறது.

காதலருடன் நடிகை சுவாதி

திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதுக் குறித்து ஸ்வாதியிடம் கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், “ இந்த கேள்வியைத் தான் எல்லோரும் கேட்கிறார்கள். ஆனால் என் வருங்கால கணவர் இதைப் பற்றி என்னிடம் ஏதும் பேசவில்லை.  முதலில் என் திருமணத்தை பிரம்மாண்டமாக செய்ய வேண்டும் என் குடும்பத்தார் பல ஏற்பாடுகளை எனக்கே தெரியாமல் செய்தனர்.

பிறகு தான் நான் பெரிய டூஸ்விட்டே வைத்தேன். மிகவும் எளிமையான திருமணம் தான் வேண்டும் என்று. காரணம், விகாஸ்.சினிமா துறையை சேராத எளிமையான ஆள். அவருக்கு இந்த ஆடம்பரம் எல்லாம் அதிகம் பிடிக்காது அதனால் தான் திருமணத்தை சிம்பிளாக செய்ய முடிவு எடுத்துள்ளோம்.

வாழ்க்கையில் திருமணம் நடக்கத் தான் செய்யும். அதற்காக வேலையை விட முடியாது. நான் நடிக்காமல் சும்மா இருந்தால் பைத்தியம் பிடித்துவிடும். அதனால் தொடர்ந்து சினிமா படங்களில் நடிப்பேன்.” என்று கூறியுள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close