Advertisment

காதலனுடன் கலகலப்பாக போஸ் கொடுத்த தமன்னா... ''தி லஸ்ட் ஸ்டோரி 2'' ப்ரமோஷன் போட்டோஸ் வைரல்

லஸ்ட் ஸ்டோரிஸ் 2 படத்தில் சுஜோய் கோஷின் குறும்படத்தில் தமன்னா மற்றும் விஜய் வர்மா நடித்துள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamanna

நடிகை தமன்னா - விஜய் வர்மா

மும்பையில் நடைபெற்ற தி லஸ்ட் ஸ்டோரி சீசன் 2 நிகழ்ச்சியில் நடிகை தமன்னா - விஜய் வர்மா இருவரும் கலந்துகொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னா தற்போது தமிழில் ரஜினிகாந்துடன் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்தியில் தயாராகியுள்ள ஆன்டாலஜி படமான தி லஸ்ட் ஸ்டோரி சீசன் 2 படத்தில் தனது காதலர் விஜய் வர்மாவுடன் இணைந்து நடித்துள்ளார். நடிகை தமன்னா கடந்த சில மாதங்களாக நடிகர் விஜய் வர்மாவுடன் டேட்டிங்கில் இருந்து வருகிறார்.

இதுகுறித்து சமுகவலைதளங்களில் செய்திகள் வெளியாகி வந்த நிலையில் சமீபத்தில் தமன்னா தனது காதலருடன் டேட்டிங்கில் இருப்பதை உறுதி செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து தமன்னா விஜய் வர்மா தொடர்பான செய்திகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனிடையே தமன்னா விஜய் வர்மா இணைந்து நடித்துள்ள தி லஸ்ட் ஸ்டோரி 2 படத்தின் ப்ரோஷன் நிகழ்ச்சியில் இருவரும் பங்கேற்று போஸ் கொடுத்துள்ளனர்.

publive-image
publive-image

நெட்ஃபிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ள ஆன்டாலஜி படமான தி லஸ்ட் ஸ்டோரி 2-ல் சுஜோய் கோஷின் பிரிவில் தமன்னாவும் விஜய்யும் நடித்துள்ளனர். இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் தமன்னாவும் விஜய் வர்மாவும் தனித்தனியாகவும், ஒன்றாக இணைந்தும் போஸ் கொடுத்தனர். மேலும் ஒருவரையொருவர் கண்களை விலக்க முடியாமல் பார்த்து புன்னகையுடன் போஸ் கொடுத்தனர்.

publive-image
publive-image

முதலில் கோவாவில் ஒரு புத்தாண்டு விருந்தில் தமன்னாவும் விஜய் வர்மாவும் காணப்பட்டபோது இவர்களுக்குள் காதல் என்ற தகவல் வெளியானது. அதனைத் தொடர்ந்து மும்பையில் பலமுறை இவர்கள் ஒன்றாக சுற்றியதை பார்க்க முடிந்தது. அதன்பிறகு சமீபத்தில் விஜய் வர்மாவுடன் தனது காதலை உறுதி செய்த தமன்னா, சமீபத்திய பேட்டியில், விஜய் வர்மா தனது "மகிழ்ச்சியான இடம்" என்று கூறியிருந்தார்.

publive-image
publive-image

மேலும் விஜய் என்மீது மிகுந்த அக்கறை கொண்டவர், “நான் மிகவும் எதிர்பார்க்கும் ஒருவர். நான் மிக மிக இயல்பாகப் இணைந்த ஒருவர் அவர் எனக்கு ஒரு பாதுகாவலனாக இருக்கிறார் என்று தமன்னா கூறியுள்ளார். தனது சினிமா வாழ்க்கையில் இதுவரை லிப் டூ லிப் காட்சியில் நடித்திரா தமன்னா இந்த படத்தில் தனது காதலனுக்காக அந்த பாலிசியை மாற்றியுள்ளதாக சமீபத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamanna Bhatia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment